செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
கொலிஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் வேண்டும்: சட்ட அமைச்சர் கடிதம்
அண்மைக்காலமாக கொலிஜியம் விவகாரத்தில் நீதித்துறையும், மத்திய அரசும் எதிர்மறை கருத்துக்களை மேற்கொண்டு வருவதால் லேசான மோதல் போக்கு நிலவுகிறது.…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
கொலிஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் வேண்டும்: சட்ட அமைச்சர் கடிதம்
Posted : வியாழக்கிழமை, ஜனவரி 26 , 2023 09:24:34 IST
அண்மைக்காலமாக கொலிஜியம் விவகாரத்தில் நீதித்துறையும், மத்திய அரசும் எதிர்மறை கருத்துக்களை மேற்கொண்டு வருவதால் லேசான மோதல் போக்கு நிலவுகிறது. இந்த மோதல் போக்கை வலுப்படுத்தும் விதமாக தற்போது மத்திய அரசு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலிஜியத்தில் மத்திய அரசின் பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அதோடு, கொலிஜியத்தின் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த யோசனையை முன்வைத்துள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
மத்திய அரசின் சட்ட அமைச்சர் கிரன் ரிஜிஜூ தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் 'உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட கொலிஜியம் அமைப்பின் மூலம் கடந்த 25 ஆண்டுகளாக நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமன விவகாரத்தில், வெளிப்படைத் தன்மையையும் பொறுப்புணர்வையும் ஊக்குவிக்க அரசு விரும்புகிறது. இதற்காக, கொலிஜியம் குழுவில் அரசு பிரதிநிதிகள் சேர்க்கப்படுவதை அரசு பரிந்துரைக்கிறது'' என குறிப்பிட்டுள்ளார்.
|