???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   23 , 2019  22:53:27 IST

இலங்கையில் ஈஸ்டர் தினத்தையொட்டி  சர்ச்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இலங்கையில் நேற்றுமுன்தினம் முதல் 8 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. காலை 8.45-க்கு மேற்கு கடற்கரை பகுதி நகரமான நிகோம்போவில் புனித செபாஸ்டியன், புனித அந்தோணி சர்ச்சுகளிலும், மட்டக்களப்பில் உள்ள இன்னொரு சர்ச்சிலும் வெடிகுண்டுகள் வெடித்தன.

இதேபோன்று தி ஷாங்ரி லா, தி சின்னமான் கிராண்ட், தி கிங்ஸ்பரி  ஆகிய 3 ஃபைவ் ஸ்டார் ஓட்டல்களிலும் குண்டுவெடிப்பு நடந்தது.

இந்த கோர சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 300-யை தாண்டியுள்ளது.500-க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளதாக யூனிசெஃப் தகவல் அளித்துள்ளது. யூனிசெஃப் தகவல் தொடர்பாளாரான கிறிஸ்டோப் பவுலியரக் ஜெனீவாவில் நிரூபர்களிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். பல குழந்தைகள் உயிருக்கு போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...