???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை! 0 முன்னாள் அமைச்சர் என்.பெரியசாமி காலமானார் 0 யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம்: கமல் 0 நடிகர்களின் பிடிவாரண்ட்: உயர்நீதிமன்றம் தடை 0 பாபர் மசூதி வழக்கு: அத்வானி ஆஜராக உத்தரவு 0 சிறையில் என்னை ஆராய்ந்தேன்!: வைகோ 0 ஆன்லைனில் தமிழக அரசு மீன் விற்பனை! 0 பாலில் ரசாயனமா?: நிறுவனம் மறுப்பு 0 கெட்டுப்போனால்தான் பால்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 0 வைரவிழா அழைப்பிதழை பெற்றுக்கொண்டார் கருணாநிதி 0 'பிரதமருக்குக் கிடைத்த அடிமைகள்': துரைமுருகன் தாக்கு 0 வைகோவிற்கு ஜாமின் 0 விவசாயிகளுக்கு ரூ.403 கோடி இழப்பீடு 0 விவசாயிகளுக்கு ரூ.403 கோடி இழப்பீடு 0 தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐ.நா. வின் விசாரணை அறிக்கை: நிராகரிக்க ராஜபக்சே கோரிக்கை

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   22 , 2015  21:32:23 IST

இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் 30-வது அமர்வு கூட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இலங்கை விவகாரம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று கூறி வந்த அமெரிக்கா, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு தற்போது உள்நாட்டு விசாரணையே போதுமானது என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் தீர்மானத்துக்கு சீனா, க்யூபா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இலங்கையின் உள்நாட்டு பிரச்சனையில் தலையிடக் கூடாது என்றும் அந்நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா., மனித உரிமை உரிமை ஆணையத்தின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஐ.நா., நடத்திய விசாரணைக்கு தனது அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறியுள்ள அவர், தற்போதைய விசாரணை அறிக்கையின் பின்னணியில் மேற்கித்திய நாடுகளின் தலையீடு உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். எனினும், போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கும் அதிகாரம் ஐ.நா., பாதுகாப்பு சபைக்கே உள்ளது என்று குறிப்பிட்டுள்ள ராஜபக்சே ஐ.நா மனித உரிமை ஆணையத்துக்கு அந்த அதிகாரம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...