???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்! 0 கர்நாடக தேர்தல்: முதல்வர் சித்தராமையா வேட்புமனுத் தாக்கல் 0 நிர்மலாதேவி விவகாரத்தில் CBI விசாரணை தேவை: வைகோ 0 எஸ்வி.சேகரின் கருத்து, அருவருக்கத்தக்கது: கனிமொழி 0 எச்.ராஜாவும், எஸ்.வி சேகரும் சைபர் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயக்குமார் 0 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: மத்திய அரசு பரிசீலனை 0 சிவகார்த்திகேயன் படத்தில் இரண்டாவது காமெடியனாக களமிறங்கும் யோகி பாபு 0 குஜராத் கலவர வழக்கு: முன்னாள் அமைச்சர் மாயாபென் கோட்னானி விடுதலை! 0 அவதூறு கருத்துகள் பரப்பும் எச்.ராஜா மீது வழக்கு தொடரப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் 0 பேராசிாியை நிா்மலா தேவியை ஐந்து நாள் சி.பி.சி.ஐ.டி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 0 கியூபாவின் புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு! 0 ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட விஜயகாந்த், தே.மு.தி.க.வினர் கைது! 0 பெண் பத்திரிகையாளர்கள் பற்றிய சர்ச்சைக் கருத்து: மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்! 0 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்யக்கோரி துணை ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு! 0 ஆறாவது ஐ.பி.எல் சதம் : கெத்து காட்டிய கெயில்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐ.நா அறிக்கை : பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவு

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   01 , 2015  00:23:57 IST

இலங்கை இறுதிக்கட்டப் போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்த, ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை முறைப்படி தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பு நாடுகளின் கருத்துகள் கேட்கப்பட்டன. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின், 30ஆவது கூட்டம், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், ஒரு வார காலத்திற்கு முன்பு, இலங்கை இறுதிப்போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல் தொடர்பான, ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதையடுத்து, அமெரிக்காவும் தனியாக, வரைவு தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தது. இந்நிலையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை முறைப்படி ஜெனீவா கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான பொதுவிவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய இலங்கை பிரதிநிதி, ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தோடு இணைந்து செயல்பட்டு, நடவடிக்கையையும், விசாரணையையும் இலங்கை மேற்கொள்ளும் என்றார். இக்கூட்டத்தில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா, எஸ்தோனியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள், இலங்கையின் நிலைப்பாட்டிற்கும், அந்நாடு எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவித்தன.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...