செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
அப்பாவுக்கு ரஜினிகாந்த்..எனக்கு ஃபகத்: உதயநிதி
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் கூட்டணி மாமன்னன் படத்தில்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
அப்பாவுக்கு ரஜினிகாந்த்..எனக்கு ஃபகத்: உதயநிதி
Posted : வியாழக்கிழமை, மே 26 , 2022 07:04:56 IST
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் கூட்டணி மாமன்னன் படத்தில் நடித்து வருகிறது. ஃபகத்துடனான நடிப்பு, தனது தந்தைக்குப் பிடித்த படம் என சினிமாவுடனான தனது உறவைப் பற்றி பல விஷயங்களைப் பகிர்ந்தார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். அந்த பேட்டியில் இருந்து.
“ஃபகத்தின் எல்லாப் படங்களையும் நான் பார்த்து விடுவேன். கடைசியாக வந்த ட்ரான்ஸ், ஜோஜி வரை பார்த்துவிட்டேன்.அவருடைய மகேஷிண்ட பிரதிகாரம் தமிழில் ரீமேக் செய்ததைப் பற்றி அண்மையில் சந்தித்தபோது சொன்னேன். பார்த்ததாகச் சொல்லி மகிழ்ந்தார்.மாரி செல்வராஜ் படத்தில் இதுநாள்வரை கீர்த்தி சுரேஷ் உடனான பகுதிகள் மட்டும்தான் போயிருக்கு.அதற்கே 50 டேக் ஆகுது. இன்னும் ஃபகத்துடனான காட்சிகள் இனிமேல் தான் தொடங்கனும்.அதற்கு எத்தனை டேக் ஆகப்போகுதோ தெரியலை.
எங்க வீட்டை சுத்திதான் பாதி சினிமா சூட்டிங் நடக்கும். நான் சின்னப்பிள்ளையா இருக்கும்போது பாலைவன ரோஜாக்கள் சூட்டிங் பிரபு சார் நடிச்சது எல்லாம் நேரிலேயே போய் பார்த்திருக்கேன்.வீட்டில் எல்லாருக்கும் சிவாஜி சார் படங்கள் பிடிக்கும். அதன் பிறகு இப்போ வரை எல்லாரும் ரஜினி ரசிகர்கள், அப்பா உட்பட. எங்கள் கோபாலபுரம் வீடே ஒரு சூட்டிங் ஸ்பாட் மாதிரிதான் இருக்கும்” என கலகலப்பாகப் பல விஷயங்களைப் பகிர்ந்தார் உதயநிதி.
|