???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஈராக்கில் இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்! 0 பாஜக பொங்கி எழுந்தால் தமிழகம் தாங்காது: தமிழிசை சவுந்தரராஜன் 0 குக்கர் சின்னம் வழக்கு: விரைந்து விசாரிக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் கோரிக்கை 0 ஜி.எஸ்.டி. திருத்தியமைக்க 10 மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம் 0 பாஜகவுடன் கூட்டணியும் இல்லை; ஆதரவும் இல்லை: முதலமைச்சர் 0 டிஜிபி வளாகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயற்சி 0 மீண்டும் மணல் குவாரிகள்: நாளை டெண்டர் விடுகிறது தமிழக அரசு! 0 ரத யாத்திரை எதிர்ப்பு போராட்டம்: திமுக எம்எல்ஏக்கள் மீது வழக்குப்பதிவு 0 144 தடை மத ஊர்வலங்களுக்கு பொருந்தாது: ஹெச்.ராஜா 0 விஸ்வரூபம் எடுக்கும் பேஸ்புக் தகவல் திருட்டு விவகாரம்! 0 அ.தி.மு.க கொடிக்கம்பத்தில் பா.ஜ.க கொடி! 0 மியான்மர் அதிபர் திடீர் ராஜினாமா! 0 ம.நடராஜனுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் 0 முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே நடராஜனின் உடல் இன்று மாலை அடக்கம்! 0 கடைசி பந்தில் சிக்சர்: தினேஷ்கார்த்திக்கு மியாண்டட் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உதயநிதி படத்திலிருந்து அனிருத் விலகல்.

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   29 , 2014  00:40:00 IST

 வெகுவேகமாக வளர்ந்து வருகிற இசையமைப்பாளர் அனிருத் அதேஅளவு சிக்கல்களையும் ஏற்படுத்திக்கொள்கிறார் என்று சொல்கிறார்கள். அனிருத், கொஞ்சம் கொஞ்சமாக ஹாரிஸ்ஜெயராஜின் இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுவதை மெய்ப்பிக்கும் வகையில் தொடர்ந்து ஹாரிஸை பயன்படுத்தி வந்த உதயநிதி, தன்னுடைய அடுத்த படத்துக்கு அனிருத்தை ஒப்பந்தம் செய்தார். உதயநிதி தற்போது நண்பேண்டா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கடுத்து அவர் என்றென்றும்புன்னகை படத்தை இயக்கிய அகமது இயக்கத்தில் ஒரு படத்தைத் தயாரித்து நடிக்கவிருக்கிறார். அந்தப்படத்துக்கு இசையமைக்கத்தான் அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டாலும் அதற்கான வேலைகள் எதுவும் நடக்கவில்லை. காரணம், அனிருத் கத்தி, காக்கிச்சட்டை ஆகிய படவேலைகளில் தீவிரமாக இருந்ததே காரணம்.

 

அந்தப்பட வேலைகளை முடித்துவிட்டு நம் படவேலைகளைத் தொடங்குவார் என்று உதயநிதி நம்பிக்கொண்டிருக்க, திடீரென எனக்கு இந்தப்படத்தில் வேலை செய்ய விருப்பம் இல்லை படத்திலிருந்து நான் விலக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாராம் அனிருத். அதற்குக்காரணமாக அவர் இயக்குநர் அகமதுவுடன் இணைந்து பணியாற்றுவது சிரமமாக இருக்கும் என்று சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது. உதயநிதியும் நண்பேண்டா படத்துக்கு அடுத்து மான்கராத்தே திருக்குமரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தையே முதலில் தொடங்கவிருக்கிறாராம். இதனால் அனிருத் விலகலைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், இந்தவிசயம் பற்றித் தன்னிடம் நேரடியாகப் பேசியிருக்கலாமே என்கிற வருத்தத்தில் உதயநிதி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
 
    click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...