???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தென்கொரியாவில் பரவும் கொரோனா வைரஸ்; 556 பேருக்கு பாதிப்பு! 0 அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ் 0 சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினி கடிதம் 0 பிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வலுக்கும் கண்டனம் 0 'உத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை' 0 பிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி: உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா 0 டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் 0 இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு 0 ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா?: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் 0 ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி 0 வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் 0 கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு! 0 சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஊபர் நிறுவனத்தில் இருந்து அதன் நிறுவனர் விலகினார்!

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   25 , 2019  07:14:27 IST

ஊபர் நிறுவனத்தை தோற்றுவித்த ட்ராவிஸ் கலாநிக், தனது இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கெனவே இதன் தலைமை அதிகாரி என்ற பதவியிலிருந்து 2017 ஆம்  ஆண்டு விலகி இருந்த இவர், இப்போதைய விலகலின் மூலம் முழுவதுமாக ஊபர் நிறுவனத்தில் இருந்து வெளியேறி உள்ளார்.

 

43 வயதாகும்  கலாநிக்,  கேரட் கேம்ப் என்பவருடன் இணைந்து ஊபர் நிறுவனத்தை 2009 ஆம் ஆண்டு சிறுநிறுவனமாக  தொடங்கினார். பின்பு அசுர வளர்ச்சி ஏற்பட்டு தற்போது எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்நிறுவனம் இயங்கிவருகிறது. கைபேசி மூலம்  கார்களை  புக் செய்து கொள்ளும் வசதியை மட்டும் முதலில் இந்நிறுவனம் தந்தது. தற்போது உலகில் உள்ள போக்குவரத்தின் முக்கிய அம்சமாக மாறியுள்ளது. மேலும் உணவு டெலிவரி செய்வதிலும் கால்பதித்தது.

 

தொடர்ந்து அசுர வளர்ச்சி ஏற்பட்டாலும் 2017 ஆம் ஆண்டு இந்நிறுவனம் சிக்கல்களைச் சந்தித்தது.போட்டி நிறுவனத்தை வேவுபார்ப்பது, தனிப்பட்ட நபர்களின் தகவல்களை திருடுவது, பாலியல் துன்புறுத் தல் புகார்கள் இப்படியான காரணங்களால்   கலாநிக் பதவி விலக வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது. இந்த பிரச்சனைகள் முடித்து வைக்கப்பட்டாலும்கூட கலாநிக் பதவி விலக வேண்டும் என்ற நிர்பந்தம் நீடித்தது.  அவர் தலைமை அதிகாரி என்ற பதவியைத் துறந்தார்.

 

இதைத்தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார்  இரண்டு மில்லியன் டாலர் அளவுக்கான தனது பங்குகளை நல்ல விலைக்கு விற்ற கலாநிக்  கடைசியாக இப்போது நிறுவனத்தின் இயக்குநர் பதவியிலிருந்தும் விலகிவிட்டார்.

 

“ கடந்த பத்து ஆண்டுகளில் ஊபர்தான் என் வாழ்க்கையாக இருந்தது. என்னுடைய தற்போதைய தொழிலில் கவனம் செலுத்த சரியான முடிவை எடுக்க சரியான தருணமாக இதைக் கருதுகிறேன்” என்று ட்ராவிஸ் கலாநிக் பதவி விலகியதும் கூறிஉள்ளார். இவர் டார்க் கிச்சன்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...