செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
சாதி மோதலில் இருவர் படுகொலை – திருமாவளவன் கண்டனம்!
அரக்கோணம் அருகே சோகனூரில், இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
சாதி மோதலில் இருவர் படுகொலை – திருமாவளவன் கண்டனம்!
Posted : வியாழக்கிழமை, ஏப்ரல் 08 , 2021 11:48:53 IST
அரக்கோணம் அருகே சோகனூரில், இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் அருகே சோகனூரை சேர்ந்த சூர்யா உள்ளிட்ட நான்கு பேருக்கும், பெருமாள் ராஜப்பேட்டையைச் சேர்ந்த 20 பேருக்கும் இடையே சாதி ரீதியிலான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் சூர்யா மற்றும் அர்ச்சுனன் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”அரக்கோணம் அருகே சோகனூரில் இருவர் படுகொலை. மேலும், மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி. தோல்வி பயத்தில் சாதி-மதவெறி கும்பலின் கொடூரம்.
அரசே, பாமக சாதிவெறியர்களை- மணல் திருட்டுக் கும்பலைக் கைது செய்” என கோரிக்கை விடுத்துள்ளவர், படுகொலை கண்டித்து ஏப்ரல் 10ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்.
|