அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

எட்டு ஆண்டுகளுக்குப் பின் எதிர்காலத்தைக் காலி செய்த ட்வீட்! இங்கிலாந்து வீரருக்கு நேர்ந்த விபரீதம்!

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   07 , 2021  19:28:31 IST


Andhimazhai Image

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு  இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஒருவர் ட்விட்டரில் போட்ட கமெண்டுகள் இன்று அவர் தன் கனவான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருக்கும் நிலையில் அவரை அணியை விட்டே நீக்கச் செய்துள்ளன.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமாகியிருக்கும் ஆலி ராபின்சன், நியூசிலாந்துக்கு எதிரான முதல்  டெஸ்ட் போட்டியில் ஏழு  விக்கெட்களை வீழ்த்தியிருந்தாலும், தற்போது அணியிலிருந்து தடாலடியாக இடைநீக்கம்  செய்யப்பட்டுள்ளார்.
 
இப்படி ஒரு நிகழ்வு கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்பு நிகழ்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஆலி ராபின்சன் ஏன் நீக்கப்பட்டார்? அதற்கான காரணம் என்ன? என்பது தான் கிரிக்கெட் ரசிகர்களில் பேசுபொருளாக உள்ளது.

இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி சார்பாக 27 வயது ராபின்சன் அறிமுகமானார். முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்களையும் கைப்பற்றினார். மேலும் 42 ரன்களையும் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அணியில் இடம் பெற்று லார்ட்ஸ் மைதானத்தில் ராபின்சன் பிரவேசித்த அன்று மாலையே அவரது பழைய ட்வீட்டுகள் தோண்டி எடுக்கப்பட்டு, அவர் விமர்சிக்கப்பட்டார். கடந்த 2012-13 ஆண்டுகளில் தனது ட்விட்டர் பதிவில், இனவெறியைத் தூண்டும் விதமாகவும், பாலியல் ரீதியாக சில வார்த்தைகளைப் பதிவு செய்திருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலர் இனவெறி பிடித்த ராபின்சனை அணியிலிருந்து உடனே நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.
 
இதனையடுத்து தனது ட்வீட்களுக்க வருத்தம் தெரிவித்த ராபின்சன், "எனது செயல்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். இதுபோன்ற கருத்துக்களைத் தெரிவித்ததற்கு நான் வெட்கப்படுகிறேன். பதின்ம வயதில் நான் சிந்தனையற்றவனாகவும் பொறுப்பற்றவனாகவும் இருந்தேன். அந்த நேரத்தில் எனது மனநிலை எப்படி இருந்திருந்தாலும், எனது செயல்கள் மன்னிக்க முடியாதவை. அந்தக் காலகட்டத்திலிருந்து விட தற்போது ஒரு நபராக முதிர்ச்சியடைந்துள்ளேன். எனது ட்வீட்டுகளுக்கு முழுமையாக வருந்துகிறேன்" என தெரிவித்தார்.

இருப்பினும் டெஸ்ட் போட்டி முடிந்த அன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை  இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ராபின்சன்னை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது. அவர் 7 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாடவும் தடை விதித்துள்ளது. மேலும், அவரது ட்வீட்கள் தொடர்பாக ஒழுங்கு விசாரணையையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடத்திவருகிறது.

இது தொடர்பாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்,  ராபின்சனின் பந்துவீச்சையும், பேட்டிங்கையும் ஒரு பக்கம் புகழ்ந்தாலும், அவரின் முந்தைய கால செயல் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆகவே, ட்விட்டரில் எழுதுவதோ, சமூக ஊடகங்களில் எழுதுவதோ... எழுதுவதற்கு முன்பு சற்று யோசியுங்கள்! எத்தனை காலம் ஆனாலும் ஒரு ஸ்கிரீன் ஷாட் உங்களை வீழ்த்திவிடும்!

-தா.பிரகாஷ்



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...