???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பழனிசாமி நீக்கத்திற்கும் பாஜகவிற்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் ஜெயகுமார் 0 பண்ருட்டி ராமச்சந்திரன்,செங்கோட்டையன், ஜெயக்குமாருக்கு புதிய பதவி! 0 சேதுமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்றமுடியாது: மத்திய அரசு 0 டிடிவி தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் திடீர் விலகல்! 0 சந்திரபாபு நாயுடு செய்ததை போல தமிழக முதல்வரால் செய்ய முடியுமா?: அ. ராசா கேள்வி 0 20 பைரஸி இணையதளங்கள் முடக்கம்: தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை 0 அதிமுகவிலிருந்து கே.சி.பழனிச்சாமி நீக்கம் 0 பெண் பத்திரிக்கையாளர் அவமதிப்பு: மன்னிப்பு கேட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 சென்ற ஆண்டின் நகலாக இந்த ஆண்டு பட்ஜெட்: கமல் கருத்து 0 மா.அரங்கநாதன் இலக்கிய விருது! 0 தினகரன் அறிமுகப்படுத்திய கொடிக்கு எதிராக மனு தாக்கல் 0 குரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு 0 பஞ்சாப் ஆம் ஆத்மி தலைவர் ராஜினாமா! 0 ஜிஎஸ்டியால் தமிழகத்துக்கு வருவாய் அதிகரிப்பு: நிதி நிலை அறிக்கை 0 சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது - மத்திய அரசு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விஜய் டிவியில் தம்பி; சன் டிவியில் அண்ணன்: சபாஷ் சரியான போட்டி!

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   05 , 2017  04:45:02 IST


Andhimazhai Image

தமிழ் சினிமாவுக்கு அமானுய்ஷ்ய பேய் பிடிக்கத் தொடங்குவதற்கு முன்னரே  அது சின்னத் திரையில் நெடுநாட்களாகக் குத்தவைத்து உட்கார்ந்திருப்பதை நாம் எல்லோரும் அறிவோம். சமீபத்தில் அனுமாஷ்ய தொடராய் தொடங்கி ஹிட் அடித்ததுதான் நாகினி என்னும் மொழி மாற்றத் தொடர். அதீத பாம்பு செண்டிமெண்ட்டும், அதே அளவுக்கு கவர்ச்சியும் என இறங்கி அடித்த தொடர் இதுவெனச் சொல்லலாம். அதன் பிறகு நீலி, நந்தினி என அதன் வேறு வடிவத்தில் தொடர்கள் இப்போது ஒளிபரப்பாகிக்கொண்டுள்ளன. ஏற்கனவே ஜெய் அனுமான் – ஒரு பிரம்மாண்டமான பக்திக் காவியம் இரண்டு வெவ்வேறு சானல்களில் உலா வருகையில், இப்போது இரண்டு புதிய புராண பக்திக் காவியங்கள் விநாயகர் மற்றும் தமிழ்க் கடவுள் முருகன் என்ற பெயரில் வந்து விட்டன. இவையும் ஏற்கெனவே பல பெயர்களில் ஒளிபரப்பான கதைகள்தான். அதனாலென்ன, இனி வீடுகளில் பக்தி மணம் கமழும். திங்கள் முதல் வெள்ளிவரை இரவு ஏழு மணிக்கு விநாயகர் தொடர் வரும் அக்டோபர் 9ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.  தமிழ்க் கடவுள் முருகன் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு ஒன்பது மணிக்கு  ஏற்கனவே ஒலிபரப்பாகத் தொடங்கிவிட்டது.

 

விஜயில் ஆரம்பமாகிவிட்ட தமிழ்க் கடவுள் முருகன் தொடர், விஜய் தொலைக்காட்சி பிக்பாஸில் அடைந்த அதிகமான டி.ஆர்.பியை தக்க வைக்கும் முயற்சியாகப் பார்க்கலாம்! பிக்பாஸ் ஒளிபரப்பான போது எல்லா தமிழ்த் தொலைக்காட்சிகளின் ப்ரைம்டைம் நிகழ்ச்சிகளும் தடுமாறின. சன் டிவியும் இதற்கு விதிவிலக்கல்ல.

 

எனவேதான் விட்டதைப் பிடிக்கும் முயற்சியில் விஜய் டி.வியின் முருகனுக்குப் போட்டியாக அண்ணாச்சி விநாயகரை களமிறக்கிவிட்டிருக்கிறது சன் டிவி. ஆற்றங்கரை ஓரத்திலே அமர்ந்திருக்கும் அன்பான அண்ணன் என்னும் பாடல் வரிகளோடு சன் டிவியில் விநாயகர் தொலைக்காட்சித் தொடரின் ப்ரோமோ பாடல் வீடுகள்தோறும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

 

பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றி இதைப் போலான தொடர்கள் தொடங்கப்படுவதற்கான ஒரு காரணம். பாகுபலியின் இரண்டு பாகங்களும் சேர்த்து அடைந்த வெற்றி, அதன் கிராபிக்ஸ் துல்லியம் ஆகியவை தொலைக்காட்சித் தொடர்களிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன என்பது உண்மைதான். அதன் சாட்சியம் தான் இரண்டு வெவ்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் விநாயகர் மற்றும் தமிழ்க்கடவுள் முருகன் ஆகிய தொலைக்காட்சி தொடர்கள்.

 

சரி அண்ணனுக்கும் தம்பிக்கும் போட்டி.. யாருக்கு டி.ஆர்.பி மாம்பழம் கிடைக்கும்?

 

- சரோ லாமா -click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...