???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் 0 அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை 0 ராதாரவிக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்! 0 நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: திமுகவில் இருந்து ராதாரவி நீக்கம் 0 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: தமிமுன் அன்சாரி 0 சிவகங்கையில் மநிம வேட்பாளர் கவிஞர் சினேகன்! 0 மக்களே தலைவர்; நான் என்றும் தொண்டன்: எடப்பாடி பழனிசாமி 0 நான் பிராமணர்;சவுகிதார் ஆக முடியாது: சுப்பிரமணியன் சாமி 0 சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி! 0 எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் 0 வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் 0 சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு 0 பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் 0 வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை 0 தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாமக குறித்து அவதூறு செய்தி வெளியிட டிவி சேனலுக்குத் தடை

Posted : சனிக்கிழமை,   மார்ச்   16 , 2019  01:37:31 IST

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் குறித்து அவதூறு செய்திகளை வெளியிட தனியார் தொலைக்காட்சிக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே மணி தாக்கல் செய்த வழக்கில், கடந்த 2016-ம் ஆண்டு தனியார் மருத்துவ பல்கலைக்கழக சீட் மோசடி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு அறிக்கைகள், கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
 
இதன் காரணமாக  தனியார் தொலைக்காட்சியின் செய்திகள், முக்கிய நிகழ்ச்சிகளில் பாமக மற்றும் அதன் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் தற்போது பாமக, அதிமுகவுடன் கூட்டணி வைத்த பின், அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதை முழுமையாக ஒளிபரப்பாமல் எடிட் செய்தும், செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி பதிலளிக்க முடியாமல் கோபமடைந்தாக செய்திகளை அவதூறாக அரசியல் உள் நோக்கதுடன் ஒளிப்பரப்பியது.
 
இவ்வாறு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது பாமக மற்றும் அக்கட்சியின் தலைவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செய்தி வெளியிடத் தடை வேண்டும். மீறி பாமக குறித்து அவதூறு செய்தி வெளியிட்டால் ஒரு கோடி ரூபாய் வரை மான நஷ்ட ஈடு வழங்க கோரியிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, தனியார் தொலைக்காட்சி, அதன் நிர்வாக இயக்குனர்  ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி. அதுவரை பாமக குறித்த அவதூறு செய்திகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...