???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு! 0 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! 0 இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் 0 கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து 0 சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம்! 0 மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் 0 சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை 0 வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம்! 0 அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி 0 மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது 0 ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி 0 காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி! 0 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! 0 இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   14 , 2018  02:39:53 IST

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் 100 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 100 - வது நாளான கடந்த மே 22 - ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி திரண்ட மக்கள் பேரணியில் வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
 
இது குறித்து ரஜினி, கண்ணன், எழிலரசு உள்ளிட்ட வழக்கறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் 15 பொது நல வழக்குகளை மனுக்களாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நிர்வாக நீதிபதிகளாக இருக்கும் சி.டி.செல்வம் , பஷீர் அகமது ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது . அப்போது மனுதாரர் தரப்பில் துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவர்கள் மீது இந்திய தண்டனைச்சட்டம் 302 -ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், சம்பவம் நடந்த சமயத்தில் இணையத்தை துண்டித்தது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் துப்பாக்கிச்சூட்டின் போது காவல்துறையினர் உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறினர்.
 
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் துணை தாசில்தார் துணை தாசில்தார் துப்பாக்கிச்சூடு உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 6 பேரின் மீதான வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
 
மேலும், துப்பாக்கி சூட்டின் போது காவல்துறையினர் செய்த தவறுகளை தமிழக காவல் துறையினரே விசாரித்தால் அது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருக்குமா என்பது சந்தேகம் தான். ஏற்கனவே உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வும் இந்த வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ளது. அதை இந்த அமர்வும் ஏற்றுகொள்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
இதனைத்தொடர்ந்து மே 22-ம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதிகள், 4 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். அதேபோல, சிபிஐ விசாரணை முடிந்த பிறகு இழப்பீடு கோரி பாதிக்கப்பட்டவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என உத்திரவாதம் இல்லை என்றும் கூறினர். இதனால் தமிழக காவல் துறையினர் ஆயுதங்களை கையாள்வது தொடர்பாக ஐக்கிய நாடு சபை விதிகளின்படி சர்வதேச தரத்தில் விதிகளை மாற்றியமைப்பது தொடர்பாக குழு அமைக்க டிஜிபிக்கு உத்தரவிட்டனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...