![]() |
தினகரன் அறிமுகப்படுத்திய கொடிக்கு எதிராக மனு தாக்கல்Posted : வெள்ளிக்கிழமை, மார்ச் 16 , 2018 04:42:12 IST
டி.டி.வி தினகரன் அறிமுகப்படுத்திய கொடியை பயன்படுத்தத் தடை கோரி அதிமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டி.டி.வி தினகரன் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய அமைப்பைத் தொடங்கி கட்சிக் கொடியையும் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் தினகரன் அறிமுகப்படுத்திய கொடிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தினகரன் அறிமுகப்படுத்தியுள்ள கொடி, அதிமுகவின் கட்சிக் கொடியை போல் இருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|