அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சார்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதை - நடிகர் சூர்யா 0 நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியானது! 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு! 0 ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை! 0 எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு! 0 கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு! 0 கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்! 0 சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0 ஆடவர் குத்துச்சண்டை: சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்! 0 கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி! 0 காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! 0 ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு தகுதி! 0 வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்!: பிரபல நடிகரின் மனைவி சாடல் 0 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன்

Posted : புதன்கிழமை,   ஜுன்   26 , 2019  09:04:52 IST

தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். டி.டி.வி.தினகரனை திட்டி தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வெளியான நிலையில், தேனி மாவட்ட நிர்வாகிகள் தினகரனை சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு பேசிய டி.டி.வி.தினகரன், ‘தங்க தமிழ்ச்செல்வன் செயல்பாடு சரியில்லை என்று கட்சி நிர்வாகிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டியிருந்தனர். சமீபத்தில், தங்க தமிழ்ச்செல்வன் ஊடகத்துக்கு அளித்தப் பேட்டி முறையற்று இருந்ததால் நான் அவரை கண்டித்திருந்தேன்.

இந்தப் பேச்சு தொடர்ந்தால், கொள்கைப் பரப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கிவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்திருந்தேன். தங்க தமிழ்ச் செல்வன் விஸ்வரூபம் எடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அவர், என்னைப் பார்த்தால் பொட்டிப் பாம்பாய் அடங்கிவிடுவார். தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார். அவரிடம் விளக்கம் கேட்கும் வாய்ப்பு இல்லை.

ஜூலை மாதம் முதல் வாரத்தில் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிடப்படும்’ என்று தெரிவித்தார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...