???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 போராட்டம், கலவரங்களை கடந்து 18 படிகளில் ஏறினார் பெண் பக்தை 0 #MeToo எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா 0 சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம் 0 தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் 0 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஸ்டாலின் ஆலோசனை! 0 சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! 0 கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு 0 இந்தியாவின் "ரா" உளவு அமைப்பு என்னை கொலை செய்ய சதி: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு 0 சபரிமலை செல்பவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்: பினராயி விஜயன் உறுதி 0 குட்கா வழக்கு: 3 பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி 0 பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடியதற்காக கல்லூரி மாணவி சஸ்பெண்ட் 0 ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு உயர் நீதிமன்றம் தடை 0 பிரதமரின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு 0 அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! 0 #MeToo புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே. அக்பர் மானநஷ்ட வழக்கு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காங். தலைவரான ராகுல் காந்தி: டிடிவி தினகரன் வாழ்த்து

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   11 , 2017  22:13:30 IST

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இவரை எதிர்த்து ஒருவரும் போட்டியிடாததால் ராகுல் காங்கிரஸ் தலைவாரக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். 47 வயதான ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக வரும் 16ஆம் தேதி ராகுல் பொறுப்பேற்கிறார். இதுவரை இருந்த தலைவர்களிலேயே ராகுல் காந்திதான் இளம் வயதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 132 ஆண்டு வரலாற்றுடன் இந்தியாவின் பழமையான கட்சியாக திகழும் காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி கடந்த 19 ஆண்டுகளாக தலைமை வகித்து வந்தார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து அதிக காலம் தலைவராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சோனியா காந்தி.
 
இந்நிலையில் காங்கிரஸ் தலைவராக தேர்வாகியுள்ள ராகுல்காந்திக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் டிடிவி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “போட்டியின்றி காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள உங்களுக்கு எனது வாழ்த்துகள். நூற்றாண்டு கடந்த காங்கிரஸ் கட்சியின் முன்னோடி தலைவர்களின் பாதையில் நீங்கள் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...