???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்! 0 விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு 0 தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு 0 சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் 0 தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்! 0 காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு! 0 சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி 0 ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை! 0 அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி! 0 கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திருமுருகன் காந்தி கைதுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   10 , 2018  00:07:42 IST

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் கைதுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இன்று காலை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து திருமுருகன் காந்தியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது நிலுவையில் உள்ள தேச விரோத வழக்குகளுக்காக இந்த கைது நடைபெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
 
இந்நிலையில், இந்த கைது சம்பவத்தைக் கண்டித்து டி.டி.வி. தினகரன், தனது ட்வீட்டர் பக்கத்தில் ”தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை ஐநா அவையின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பதிவு செய்ததற்காக, மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளது, மனித உரிமை மீறல் மட்டுமல்லாது அடிப்படை உரிமையை மீறும் செயல்” என்று பதிவிட்டுள்ளார்.
 
மேலும் “திருமுருகன் காந்தியை விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்றும் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...