???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! 0 பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி! 0 ₹2,000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல் 0 அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் 0 சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.! 0 அ.ம.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணைந்தார்! 0 திருவாரூரிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்! 0 பணக்காரர்கள் தான் காவலாளி வைத்துக்கொள்வார்கள்: பாஜகவை விமர்சித்த பிரியங்கா! 0 தமிழகத்திற்கு சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்! 0 சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்! 0 தமிழகம்-புதுவையில் முதல் நாளில் 23 பேர் மனுத்தாக்கல்! 0 ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை வாபஸ் பெற கிருஷ்ணசாமிக்கு அனுமதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்!

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   13 , 2018  22:43:16 IST

அ.தி.மு.க பிரிவுக்குப் பிறகு, முன்னாள் அமைச்சர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக செயல்பட்டுவருகிறார். அதனையடுத்து, சபாநாயகரின் உத்தரவால் அவருடைய எம்.எல்.ஏ பதவி பறிபோனது. இந்தநிலையில், கடந்த மூன்று தினங்களாக செந்தில் பாலாஜி, அ.ம.மு.கவிலிருந்து விலகி தி.மு.கவில் இணையவுள்ளார் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
 
செந்நில் பாலாஜி இன்று தி.மு.கவில் இணைய உள்ளார். இந்தநிலையில், டி.டி.வி.தினகரன் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘மக்கள் பணியில் நமது முன்னேற்றத்தைத் தடுக்க தீவிரமாக முயற்சிகள் நடக்கின்றன. ஆல விருட்சத்தின் இலைகள் உதிர்வதால் விருட்சமே இல்லாமல் போய்விடுமா? சுயநலனுக்காக தலைமையை விட்டு விலகுவதும் பின்னர் மன்னிப்புக் கோரி இணைவதும் இயல்புதான். அ.தி.மு.கவையும் இரட்டை இலையும் துரோகிகளிடமிருந்து மீட்டெடுப்போம். அதுவரையில் நம்முடைய போராட்டம் தொடரும்.
 
பூனை கண் மூடினால், உலகம் இருண்டுவிடுகிறது என்பதைப் போன்றதுதான். அ.ம.மு.க தொண்டர்களைச் சீண்டுவதும் தீண்டுவதும் உயர் அழுத்த மின் கம்பியை தொடுவதற்குச் சமம். நெல் மணிகளோடு சேர்ந்து களையும் வளர்ந்துவிடுவது நிலத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும்தான். சிலர் முலாம் பூசப்பட்ட போலிகளாக இருந்துவருகின்றனர். அ.தி.மு.கவும், அ.ம.மு.கவும் இணையவேண்டும் என்பது சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றதுதான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...