???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுகவை வழிநடத்து பாஜகதான்!: நல்லகண்ணு 0 நரசிம்மராவ் போல் மவுனம்: முதல்வரை விமர்சித்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ 0 இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு 0 இன்று 42-வது ஆண்டு: இந்திராகாந்தி கொண்டு வந்த ‘நெருக்கடி நிலை’ 0 தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை: 5-வது இடத்தில் தமிழகம் 0 கிரிக்கெட்டில் இந்தியா அபார வெற்றி : ரஹானே சதமடித்தார் 0 ஆஸ்திரேலியா பாட்மிண்டன் : பட்டம் வென்றார் கிடம்பி ஸ்ரீகாந்த் 0 ரஜினி அரசியலுக்கு வர தேவையில்லை: சீமான் 0 50,000 விவசாயிகளுடன் ஜூலை 11-ல் முற்றுகை போராட்டம்: ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு முடிவு 0 ஜிஎஸ்டி வரிவிதிப்பால் விலைவாசி உயராது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 0 ராஜஸ்தானில் மசூதிக்கு மூவர்ணத்தில் மின்விளக்குகள் அமைத்து அசத்தல் 0 லாக்கரில் வாடிக்கையாளர் வைக்கும் பொருட்கள் திருட்டு போனால் வங்கி பொறுப்பு ஆகாது: ரிசர்வ் வங்கி 0 சசிகலா குடும்ப நாடகத்துக்கு முதல்வரும் துணை: கே.பி. முனுசாமி 0 ரமலான் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து 0 ரஜினி படித்தவர்: சு.சுவாமி கருத்து பொன்.ராதா பதில்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஒதுக்கியதால் வருத்தமில்லை: டி.டி.வி.தினகரன்

Posted : புதன்கிழமை,   ஏப்ரல்   19 , 2017  09:59:38 IST

அதிமுகவில் தன்னை ஒதுக்கியதால் தனக்கு வருத்தமில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியை விட்டு நான் நேற்றே ஒதுங்கி விட்டேன். சரிக்கு சரியாக போட்டியிட்டு கட்சியை பலவீனப்படுத்த விரும்பவில்லை. சிலருக்கு எழுந்துள்ள அச்சத்தால் நான் ஒதுக்கப்பட்டேன். அதிமுகவில் இருந்து ஒதுக்கியதால் நான் வருத்தப்படவில்லை. எந்தக்காரணம் கொண்டும் கட்சி பிளவுபடக்கூடாது. கட்சியோ ஆட்சியோ பலவீனப்பட நான் காரணமாக இருக்க மாட்டேன். சலசலப்பால் கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்தப்பாதிப்பும் வந்துவிடக்கூடாது.என்பலத்தை காட்ட சண்டை போடவேண்டும் என்ற அவசியம் இல்லை. அவசரகதியில் அமைச்சர்கள் முடிவை எடுத்துள்ளனர். எனக்காக தேர்தலில் பணியாற்றிய அமைச்சர்களுக்கு நன்றி. என்னை நீக்குவதால் அவர்களுக்கு நன்மை என்றால் அவர்களுக்கு நன்மை நடக்கட்டும். அமைச்சர்களுக்கு ஏற்பட்ட திடீர் அச்சத்திற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை. துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகச் சொன்னால் விலகுவேன். அனைவரும் ஒற்றுமையுடன் கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்த வேண்டும். இரு அணிகளும் இணைவதால் எனக்கு எந்த வகையிலும் பிரச்னை இல்லை. திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர் என்னிடம் போனில் பேசினர். அமைச்சர்கள் யாருக்கும் பயப்படாமல் ஆட்சியை நடத்த வேண்டும். கட்சி களங்கப்பட்டு விடக்கூடாது. கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்னைகளை கணிக்க நான் குருமூர்த்தி இல்லை. கட்சிப்பொறுப்பை எனக்குக் கொடுத்தது சசிகலாதான். கட்சி அலுவலகத்தை ஓபிஎஸ் அணியினர் கைப்பற்றப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. நீதிமன்ற விவகாரத்தை முடித்த பின்னர் சசிகலாவைச் சந்திப்பேன் என கூறினார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...