???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமரின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு 0 அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! 0 #MeToo புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே. அக்பர் மானநஷ்ட வழக்கு 0 #Metoo எதிரொலி : பெண் எஸ்.பி பாலியல் புகார் குறித்து விபரம் கேட்கும் பிரதமர் அலுவலகம் 0 கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க சோனியாவிற்கு அழைப்பு 0 வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி 0 பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் 0 நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் 0 பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை 0 என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். 0 லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் 0 என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் 0 தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது 0 #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு 0 மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நக்கீரன் கோபாலை கைது செய்தது சரிதான்: டிடிவி தினகரன்

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   09 , 2018  18:41:47 IST

நக்கீரன் புலனாய்வு இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால். இவர் ஆட்டோ ஷங்கர் முதல் வீரப்பன் வாழ்க்கை சம்பவங்கள் வரை அனைத்தையும் புலனாய்வு செய்து அதனை நக்கீரன் இதழில் வெளியிட்டதன் மூலம் தமிழ் வாசகர்கள் மத்தியில் கோபால் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் புனே செல்ல அவர் விமான நிலையம் வந்த போது, திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் நக்கீரன் கோபாலை கைது செய்தனர்.
 
நக்கீரன் இதழில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக பல செய்திகள் வெளிவந்ததாகவும், அதில் ஆளுநர் குறித்து அவதூறாக எழுதப்பட்டிருந்ததாகவும் கூறி, ஆளுநர் மாளிகை சார்பாக அளித்த புகாரின் பேரில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார்.
 
இந்நிலையில் இவரின் கைது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் டிடிவி தினகரன் நக்கீரன் கோபால் கைது  செய்யப்பட்டது சரிதான் என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும், ஆளுநரைக் குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டால் கைது செய்யத்தான் செய்வார்கள் என்று கூறினார். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்படும் பத்திரிகைகள் தங்கள் உரிமைகளை ஒருவர் மீதுஅவதூறு பரப்புவதற்காக பயன்படுத்தக் கூடாது என்றும் கூறினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...