???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! 0 பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி! 0 ₹2,000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல் 0 அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் 0 சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.! 0 அ.ம.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணைந்தார்! 0 திருவாரூரிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்! 0 பணக்காரர்கள் தான் காவலாளி வைத்துக்கொள்வார்கள்: பாஜகவை விமர்சித்த பிரியங்கா! 0 தமிழகத்திற்கு சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்! 0 சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்! 0 தமிழகம்-புதுவையில் முதல் நாளில் 23 பேர் மனுத்தாக்கல்! 0 ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை வாபஸ் பெற கிருஷ்ணசாமிக்கு அனுமதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம்

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   14 , 2018  22:39:27 IST

அ.ம.மு.க.விலிருந்து ஒரே ஒரு நிர்வாகி கட்சியில் சேர்ந்ததை விழா போன்று கொண்டாடும் அளவுக்கு தி.மு.க பலவீனமாக உள்ளது என்று டி.டி.வி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
 
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக செயல்பட்டுவந்தார். கடந்த ஒரு வார காலமாக செந்தில் பாலாஜி, அ.ம.மு.கவிலிருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்து கொண்டார்.
 
செந்தில் பாலாஜி, தி.மு.கவில் இணைந்தது குறித்துப் பேசிய டி.டி.வி.தினகரன், ‘ஒவ்வொருவரும் கட்சியில் இருப்பதும் விலகுவதும் அவரவர் விருப்பம். யாரையும் பிடித்து வைக்க முடியாது. செந்தில் பாலாஜி, தி.மு.கவில் இணைந்ததில் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. நான்கு தொகுதிகளில் உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பான 4,000 விண்ணப்பங்களைத் திரும்பத் தராமல் சென்று விட்டார். அதனால், பல நிர்வாகிகள் தொண்டர்களின் உழைப்பு வீணாகியுள்ளது. அதுதான் வருத்தமாக உள்ளது. அ.ம.மு.கவிலிருந்து ஒரே ஒரு நிர்வாகி, தி.மு.கவில் இணைந்ததை அவர்கள் விழா போன்று கொண்டாடுகின்றனர். இதிலிருந்து தி.மு.க எந்த அளவுக்கு பலவீனமாக உள்ளது என்று தெரிகிறது. ஆர்.கே.நகரில் என்னிடம் டெபாசிட் இழந்ததிலிருந்து தி.மு.க எனக்கு எதிராக சதித் திட்டம் தீட்டிவருகிறது. தி.மு.க அற்ப காரியங்களைச் செய்து சந்தோஷம் கொள்கிறது’ என்று தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...