???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்! 0 விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு 0 தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு 0 சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் 0 தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்! 0 காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு! 0 சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி 0 ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை! 0 அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி! 0 கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உண்ணாவிரதம் இருக்கும் அரசு ஊழியர்களுடன் தினகரன் சந்திப்பு

Posted : புதன்கிழமை,   ஜுன்   13 , 2018  07:52:25 IST

சம்பள உயர்வு மற்றும் பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி அரசு ஊழியர்- ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ நடத்திவரும் போராட்டம் 3-வது நாளாக நீடித்து வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு ஆர்.கே. நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.டி.வி. தினகரன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது: ''அரசு ஊழியர்-ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானது. 3 நாட்களாக அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களை முதல்வர், அமைச்சர்கள், சந்திக்கவில்லை. இன்றைக்கு குருட்டு அரசாங்கம் நடந்து வருகிறது. ஒரு தலைகீழான அரசாங்கத்தில் மக்கள் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக யாரையும் பலி கொடுக்க தயாராகி விட்டார்கள். ஈவு இரக்கம் இவர்களுக்கு இல்லை. அதனால் உங்கள் உடலை வருத்தி உண்ணாவிரதம் இருப்பதை கைவிட வேண்டும். உங்களுக்கு இந்த அரசிடம் நியாயம் கிடைக்காது. மக்கள் பிரச்சனையை தீர்க்க இவர்கள் முன் வரமாட்டார்கள். போராட்டம் முற்றி உயிர்ப்பலி ஏற்பட்ட பிறகு ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் என்று இழப்பீடு வழங்குவார்கள். இந்த ஆட்சி நீடிக்கப்போவதில்லை.'' இவ்வாறு அவர் பேசினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...