???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை 0 உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி! 0 உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா! 0 சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 0 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத்! 0 ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் 0 காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி! 0 தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன?: நீதிபதி கிருபாகரன் 0 வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும்: தமிழிசை 0 தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு 0 எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மாணவி வளர்மதி கைது 0 நிர்மலா தேவி விவகாரம்: கருப்பசாமியின் ஜாமீன் மனு வாபஸ் 0 தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் 0 காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை: குலாம் நபி ஆஸாத் 0 காஷ்மீரில் ஆட்சியைவிட தேசிய பாதுகாப்பு முக்கியம்: கூட்டணி விலகல் குறித்து பாஜக விளக்கம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எடப்பாடி பழனிசாமி- ஓபிஎஸ் அரசை நீக்கும்வரை ஓயமாட்டோம்: தினகரன் சூளுரை.

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   04 , 2017  11:18:34 IST

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் அ.தி.மு.கவுக்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் செய்து வருகிறார்கள். அவர்களை நீக்கும் வரை ஓயமாட்டோம் என தினகரன் கூறியுள்ளார்.
 
பெரம்பலூரில் தனது ஆதரவாளர் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட டிடிவி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது..
 
எடப்பாடி பழனிசாமி அரசை அகற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து வரும் எனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் போராளிகள். அவர்களுக்கு என் மீது எந்தவிதமான அதிருப்தியும் இல்லை. கவர்னரின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே எனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒரே இடத்தில் உள்ளனர். சொந்த வேலை காரணமாக சிலர் ஊருக்குச் சென்றுள்ளனர்.மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது கூட என்னுடன் எம்.எல்.ஏ.க்கள் வந்திருந்தனர். கட்சிக்கும், மக்களுக்கும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் துரோகம் செய்து வருகிறார்கள். அவர்களை நீக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். இந்த அரசை நாங்கள்தான் உருவாக்கினோம். யாரை நாங்கள் முதல் அமைச்சராக்கினோமோ அவரே இன்று  கட்சிக்கு துரோகம் செய்துள்ளார். அதிமுகவைக் காப்பாற்ற எந்த ஒரு முடிவையும் எடுப்பேன். இவ்வாறு டிடிவி.தினகரன் கூறினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...