அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

திருவண்ணாமலையில் கோலகலமாக நடைபெறும் டிடிவி தினகரன் மகள் திருமண விழா!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   16 , 2021  10:41:07 IST

திருவண்ணாமலையில் கோலகலமாக நடைபெற்று வரும் டிடிவி தினகரன் மகள் திருமண விழாவில் பங்கேற்க, அதிமுக கொடிகட்டிய காரில் வருகை தந்த வி.கே.சசிகலாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூரைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. துளசி வாண்டையார் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசி வாண்டையாருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
 
தொடர்ந்து, திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை வி.கே.சசிகலா தலைமையில் திருமணம் நடைபெற்றது.
 
முன்னதாக இரவு வரவேற்பு நிகழ்ச்சிக்கு அதிமுக கொடி கட்டிய காரில் வருகை தந்த வி.கே.சசிகலாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 
மேலும் திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் அண்ணாமலையார் திருக்கோவிலில் தரிசனம் மட்டும் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 
அதே நேரம் வி.கே.சசிகலாவும் அண்ணாமலையார் திருக்கோவிலில் தரிசனம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண விழாவையொட்டி கூட்டநெரிசலை தவிர்க்க திருவண்ணாமலை-வேலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...