???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு - டிடிவி தினகரன் கண்டனம்

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   14 , 2019  02:48:18 IST


Andhimazhai Image
பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடப்புக் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு திடீரென அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடப்புக் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு திடீரென அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.
 
மத்திய அரசு மேற்கொண்ட சட்டத் திருத்தத்தின்படி, இப்பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக கூறியுள்ளார்கள். ஆறு மாதங்களுக்கு முன்பு இப்படியொரு தகவல் வெளியானபோது, "மாநில அரசு விரும்பினால் இப்பொதுத் தேர்வை நடத்தலாம் என்றுதான் மத்திய அரசு கூறியிருக்கிறது" என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். ஆனால், அதற்கு மாறாக தற்போது இந்த அறிவிப்பை திடீரென வெளியிட்டிருக்கின்றனர்.
 
அதே நேரத்தில், இத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்று குறிப்பிட்டிருக்கின்றனர். இது தமிழக அரசு உச்சகட்ட குழப்பத்தில் இருப்பதைக் காட்டுகிறது. அப்படி என்றால், பொதுத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டிய அவசியம் என்ன? மேலும், 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டால் இடைநிற்றல் அதிகமாகும் என்ற கல்வியாளர்களின் எச்சரிக்கை குறித்து தமிழக அரசுக்குக் கவலை இல்லையா? குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்பதை ஆட்சியாளர்கள் ஏன் உணரவில்லை? மேலும், ஏற்கெனவே மன அழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு மேலும் மன உளைச்சலை அதிகரிக்கவே செய்யும்.
 
மத்திய அரசு இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கிச் சொல்லி, மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, மாநில அரசுக்கு இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது. எனவே, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...