???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நேர்காணல்: கமல் முதல் ரஜினி வரை - ஒளிப்பதிவாளர் திரு 0 பல்கலைக்கழக மானிய குழுவை கலைக்கக்கூடாது: மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் 0 பேரிடர் மீட்பு பயிற்சியில் மாணவி மரணம்: பயிற்சியாளருக்கு ஜூலை 27 வரை காவல் 0 நியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாது: நியூட்ரினோ ஆய்வு மைய இயக்குநர் 0 ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் 0 மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு! 0 திருப்பதி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனத்திற்கு ஒன்பது நாட்கள் தடை 0 வங்கதேச பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு! 0 மதம், பிரிவினை என மக்களை அச்சுறுத்துகிறது காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் விமர்சனம் 0 பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் கைது! 0 அப்பல்லோவில் ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு! 0 எட்டு வழிச்சாலை கெட்ட வழிச்சாலையாக மாறிவிடக் கூடாது: கவிஞர் வைரமுத்து 0 ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய்: ரூ.32,000 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம்! 0 அரசு கட்டணத்தையே வசூலிக்க அண்ணாமலை பல்கலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! 0 மீன்களில் ரசாயன பூச்சு: அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டி.டி.வி.தினகரன் பொதுக்கூட்டம் : அனுமதி வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   11 , 2017  06:45:15 IST

மதுரை மேலூரில் வரும் 14-ந்தேதி நடைபெற உள்ள டி.டி.வி.தினகரன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து இரண்டாக உடைந்த அ.தி.மு.க. இப்போது மூன்றாகப்  பிரிந்து செயல்பட்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூடி துணைப்பொதுச் செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

 

இந்த நிலையில் அ.தி.மு.க. தொண்டர்களை சந்தித்து டி.டி.வி.தினகரன் ஆதரவு திரட்டும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். முதற்கட்டமாக மதுரை மாவட்டம் மேலூரில் வருகிற 14-ந்தேதி தினகரன் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதன் ஏற்பாடுகளை  தினகரன் ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் அ.தி.மு.க. அம்மா அணியின் நகர செயலாளர் சார்பில்  மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது . அதில் மேலூரில் வருகிற 14-ந்தேதி டிடிவி.தினகரன் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு போலீசாரிடம் விண்ணப்பித்துள்ளோம். ஆனால் இதுவரை அனுமதி வழங்கவில்லை.எனவே பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்குமாறு போலீசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த மனு மீதான விசாரணையில் இன்று பிற்பகல் நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி மேலூர் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...