???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு 0 மாநில தலைமை தகவல் ஆணையர் தேர்வில் வெளிப்படைத்தன்மை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 'தல' அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா?: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 0 கோவை விபத்தில் காலை இழந்தப் பெண்ணுக்கு வேலை கோரி மனு 0 தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம் 0 சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்பப் பெற வேண்டும்: காஷ்மீர் எம்.பிக்கள் போராட்டம் 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 19- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது! 0 முதல்வர் தலைமையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்! 0 எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினிகாந்த் கேலி பேச்சு 0 பெண் பக்தரை கன்னத்தில் அறைந்த தீட்சிதர்! 0 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி! 0 அயோத்தி வழக்கில் மேல்முறையீடு: இஸ்லாமியர்கள் தனிநபர் சட்டவாரியம் அறிவிப்பு 0 கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விடுதலைப் புலிகள் குறித்து முத்தையா முரளிதரன் கூறியது என்ன?

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   12 , 2019  05:02:28 IST

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் சமீபத்தில் கூறிய கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. ''தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட நாளே எனது வாழ்வின் மிக முக்கிய நாள்'' என அவர் கூறியதாக வெளியான செய்தியை தொடர்ந்து பலரும் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பலத்த எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து போர் குறித்து உண்மையில் தான் சொன்ன கருத்து பற்றி முத்தையா முரளிதரன் விளக்கம் அளித்துள்ளார்.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை தலைநகர் கொழும்பில் நடைப்பெற்ற 'நிபுணர்களின் மாநாடு' எனும் நிகழ்ச்சியில் முத்தையா முரளிதரன் பங்கேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயவும் பங்கேற்றார்.
 
அப்போது, ''2009-ல் விடுதலை புலிகள் அழிக்கப்பட்ட நாளே என் வாழ்வின் முக்கியமான நாள்'' என கோத்தபய முன்னிலையில் முத்தையா முரளிதரன் பேசியதாக செய்தி வெளியானது.
 
இதுகுறித்து முத்தையா முரளிதரன் அளித்துள்ள விளக்கத்தில், ''விடுதலை புலிகள் அழிக்கப்பட்ட நாளே என் வாழ்வின் முக்கியமான நாள் என நான் கூறவில்லை. எனது கருத்தை ஊடகங்கள் திரித்து கூறிவிட்டன'' என கூறியுள்ளார்.
 

மேலும், அந்த நிகழ்ச்சியில் முத்தையா முரளிதரன் பேசிய காணொளி வெளியாகியுள்ளது. அதில் அவர் பேசியுள்ளதாவது, “விளையாட்டு, அரசியல் இரண்டிலும் தலைவன் என்பவன் வெறும் வார்த்தைகளாக மட்டும் இருக்க கூடாது, எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். தேர்தலில் அப்படிப்பட்ட தலைவனையே நான் ஆதரிப்பேன். நமது நாட்டில் பல்வேறு மதங்களும், இனங்களும் இருக்கலாம். ஆனால், நாட்டின் தலைவர் தன்னை தந்தையாகவும், மக்களை குழந்தைகளாகவும் கருதி அனைவரையும் பாதுகாக்க வேண்டும். அதேபோல் நாட்டின் தலைவராக இருக்கக்கூடிய ஒருவரால் மட்டுமே அனைத்து பணிகளையும் செய்துவிட முடியாது. பல பேர் கொண்ட குழுவின் மூலமே நாட்டை நிர்வகிக்க முடியும். எனவே தலைவர் என்பவர் தனது குழுவை திறன்பட நிர்வகிக்கக்கூடியவராக இருக்க வேண்டும்.

 

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்வேன் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. உயிரைக் கொடுத்துவிட்டால் நாட்டை யார் காபாற்றுவது. இலங்கை கிரிக்கெட் அணிக்கு நான் உயிரைக் கொடுத்து விளையாடலாம். ஆனால், நான் உயிரைக் கொடுத்தால் விக்கெட்டுகளை யார் எடுப்பது? தலைவராக இருக்க வேண்டியவர் சரியான முடிவுகளை எடுக்கும் ஆற்றலை கொண்டிருப்பதும் அவசியம்.

 

நாங்கள் தமிழர்கள். நாங்கள் இங்கு மிகுந்த அச்சத்துடனே வாழ்ந்தோம். சிலருக்கு அச்சம் என்பது என்னவென்று தெரியவில்லை. பாகிஸ்தானில் நிகழும் குண்டுவெடிப்பு பற்றி அறியும்போது அந்த இரண்டு நொடிகள் ஏற்படுவதுதான் அச்சம்.

 

1972-ல் நான் பிறந்தேன். பிறகு நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், அசாதாரண சூழலில் நாங்கள் சிக்கினோம். வீடுகள் எரிக்கப்பட்டன, அனைத்தும் எரிந்தன. எனது அப்பா குண்டடிப்பட்டார். பெரும்பாலான மக்கள் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தும் எனது தந்தை தைரியமாக இது எனது நாடு, எனது மண் என இங்கேயே இருந்தார். அந்த நம்பிக்கையும், தைரியமும் எனக்கும் இருந்தது.

 

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டே நாளே என வாழ்வின் சிறந்த நாள். போர் சூழலின்போது தமிழர்களும் சிங்களர்களும் ஒருவித அச்சத்தோடே வாழவேண்டியிருந்தது. போர் முடிவுற்றதால் அந்த அச்சம் நீங்கி மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சூழல் ஏற்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் மக்கள் அச்ச மனநிலையில் வாழ்கிறார்கள். இந்த தேர்தலில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், மக்களுக்கு யார் பாதுகாப்பு அளிப்பார்கள் என்பது தான். எனவே நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்பவர்களுக்கு தான் வரும் தேர்தலில் ஆதரவளிக்க வேண்டும். மக்களைன் பாதுகாப்பை உறுதி செய்பவனே உண்மையான தலைவன். அதேபோல் அந்த தலைவன் நிச்சயம் அரசியல்வாதியாக இருக்க வேண்டும். மற்றவர்கள் அந்தந்த துறையில் தான் சிறந்தவர்களாக இருக்க முடியும். நான் சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்கலாம். ஆனால், எனக்கு அரசியல், மக்களின் நலன் குறித்து என்ன தெரியும்? நாட்டின் தலைவருக்கு அரசியல் அனுபவம் இருக்க வேண்டும். சிறந்த தலைவனை நாமே உருவாக்க வேண்டும். ஏனெனில் நாம் தான் யார் வேண்டுமென தீர்மானிக்கிறோம். நல்ல மனதும், சிந்தனையும் உள்ள தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்” என முத்தையா முரளிதரன் கூறியிருக்கிறார்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...