???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி உயர்வு 100ஐக் கடந்தது! 0 ஆந்திராவில் மேல்சபை கலைப்பு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் 0 உமர் அப்துல்லாவின் படம் வேதனையளிக்கிறது: மு.க.ஸ்டாலின் 0 கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான முகேஷின் மனு இன்று விசாரணை 0 கேரளாவில் CAA-க்கு எதிராக 620 கி.மீ மனிதச் சங்கிலி! 0 திருச்சி: பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை 0 துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: த.பெ.தி.க.வினர் கைது 0 ஏர் இந்தியா விற்பனை: சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு 0 'அடிக்க வேண்டும்': ஸ்டாலின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை! 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு பாகிஸ்தானுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   19 , 2019  22:48:17 IST

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்த அவர் தற்போது இம்ரான் கானுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அதிபர் டிரம்ப் உடனான 30 நிமிட உரையாடலின் போது, பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலின் முக்கியத்துவத்தையும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை விதிவிலக்கின்றி ஒழிப்பதன் அவசியத்தையும் பிரதமர் மோடி எடுத்துக்கூறினார்.

இம்ரான் கானுடனான தொலைபேசி உரையாடல் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ஜம்மு-காஷ்மீரின் நிலைமை குறித்தும், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழ்நிலை குறித்தும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், இந்நிலை தொடராமல் இருக்க உடனடி பேச்சுவார்த்தை குறித்த அவசியத்தை வலியுறுத்தியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அதிபர் டிரம்ப், "எனது இரண்டு நல்ல நண்பர்களான இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரிடம் வர்த்தகம் தொடர்பாகவும் மிக முக்கியமாக காஷ்மீரில் பதற்றத்தை குறைப்பது தொடர்பாகவும் பேசினேன். ஒரு கடினமான சூழ்நிலை, ஆனால் நல்ல உரையாடல்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...