???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 போக்குவரத்து விதிமீறல்: இரண்டு நாட்களில் ஒன்றரை லட்சம் வழக்குகள் பதிவு 0 இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்! 0 டி.கே.சிவக்குமார் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை! 0 கர்நாடகத்தை பொறுத்தவரையில் கன்னடம்தான் முதன்மையான மொழி: எடியூரப்பா 0 பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து: தலைவர்கள் வாழ்த்து! 0 பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மரியாதை 0 பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது! 0 அதிமுக அரசின் லஞ்சம் அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறது: ஸ்டாலின் காட்டம் 0 ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்: முதலமைச்சர் 0 அரசு அளித்த சத்தியத்தை ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ மாற்ற முயற்சிக்கக் கூடாது: கமல் 0 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் 0 உ.பி.யில் மாணவி பாலியல் புகார்: பாஜக தலைவர் சின்மயானந்தாவுக்கு எதிராக 43 வீடியோக்கள் ஒப்படைப்பு 0 இந்தி திணிப்பை எதிர்த்து மற்ற மாநிலங்களுடன் இணைந்து போராடுவோம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 0 சட்டப்பிரிவு 370 -ரத்துக்கு எதிரான மனுக்கள் மீது இன்று விசாரணை! 0 ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   21 , 2019  23:28:08 IST

காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்றும், பிரதமர் மோடியை வார இறுதியில் பிரான்சில் சந்திப்பேன் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் ஊடகங்களிடம் அப்போது,

"வெளிப்படையாக சொல்கிறேன். காஷ்மீர் பிரச்சினை, மிகவும் தீவிரமான பிரச்சினை. நான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் பேசினேன். இந்திய பிரதமர் மோடியுடனும் பேசினேன். இருவரும் எனது நண்பர்கள். அவர்கள் பெரிய மனிதர்கள். அவர்கள் தங்களது நாட்டை நேசிக்கிறார்கள்.

பிரான்சில் ஜி௭ உச்சி மாநாட்டின்போது நான் பிரதமர் மோடியை சந்திப்பேன். எனவே வார இறுதியில் நான் மோடியுடன் இருப்பேன். காஷ்மீர் பிரச்சினையில், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழலை தணிக்க நான் முயற்சிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இங்கு இப்போதுதான் வந்து சென்றார். நான் இருவருடனும் நல்லுறவு வைத்துள்ளேன்.

காஷ்மீர் பிரச்சினை மிக கடினமான பிரச்சினையாக உள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் பீரங்கிகளையும், கனரக ஆயுதங்களையும் பயன்படுத்துகின்றன. இது நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது.

எனவே, நான் இந்தநிலையில் உதவ நினைக்கிறேன். ஆனால் இவ்விரு நாடுகள் இடையே மிகப்பெரிய பிரச்சினைகள் இருக்கின்றன.

இதில் நான் மத்தியஸ்தம் செய்ய முடியும் அல்லது என்னால் இயன்றதை செய்ய முடியும். அவர்கள் இருவருடனும் எனக்கு சிறப்பான உறவு உள்ளது. ஆனால் அவர்கள் இருவரும் இந்த தருணம், நண்பர்களாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...