???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் 0 ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி! 0 கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது! 0 கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை! 0 குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் 0 கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது! 0 மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் 0 கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது! 0 சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல்: இன்று முதல்கட்ட வாக்குபதிவு! 0 பணமதிப்பிழப்பும் ஜிஎஸ்டியும் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளின: ரகுராம் ராஜன் 0 ஜனவரியில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காலத்தின் திரைச்சீலை- ஓவியர் மருது நினைவலைகள் விழா!

Posted : புதன்கிழமை,   ஜனவரி   08 , 2014  08:07:11 IST


Andhimazhai Image

ஓவியர் ட்ராட்ஸ்கி  மருதுவைப் பற்றிய பல ஆளுமைகளின் நினைவலைகளை அகநி பதிப்பகம் காலத்தின் திரைச்சீலை என்ற பெயரில் ஒரு நூலாகத் தொகுத்துள்ளது. அதன் வெளியீட்டுவிழா சென்னையில் 7-01-2014 அன்று நடைபெற்றது.

இந்நூலைத் தொகுத்தவரான கவிஞர் வெண்ணிலாவும் அவரது கணவர் கவிஞர் முருகேஷும் இணைந்து நெறிப்படுத்திய இந்நிகழ்வில் மருதுவைப் பற்றிய நெகிழ்வான தருணங்கள் நிறைய பேச்சாளர்களால் பகிர்ந்துகொள்ளப்பட்டன. தி.கிள்ளிவளவன், கவிஞர் தமிழேந்தி, சௌந்தர் வல்லத்தரசு, மு.ராஜசேகர், தி.ரமேஷ், கவிதாபாரதி, ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், இயக்குநர் மிஷ்கின், தமிழச்சி தங்கப்பாண்டியன்,  மு.ராஜேந்திரன் ஐஏஎஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

நூலை வெளியிட்டுப் பேசிய மு.ராஜேந்திரன் இயல்பாகவும் நகைச்சுவையாகவும் பேசினார். புதுடெல்லியில் நடனக்கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்து மருதுவைப் பற்றிய ஒரு நேர்காணல் செய்ததை விவரித்தார். அத்துடன் யாரையும் கவர்ந்துவிடுகிற ஓவியர் மருதுவின் ஆகர்ஷ்ண சக்தியைப் பற்றியும் பேசினார். அவர் தான் இந்நிகழ்ச்சி ட்ராட்ஸ்கி மருதுவின் அறுபதாவது அகவையை ஒட்டி நடைபெறுகிறது என்ற ரகசியத்தைப் போட்டு உடைத்தார். மருதுவுக்கு அறுபது வயதா ஆகிவிட்டது என்று வந்திருந்த அனைவரும் மூக்கின் மீது விரலை வைத்தார்கள்.

இயக்குநர் மிஷ்கின் தன்னுடைய தகப்பனான மருது விழாவுக்கு தாமதமாக வந்தது பற்றி வருத்தம் தெரிவித்து உரையைத் தொடங்கினார்.’’ எப்போதும் விழாக்களில் பேசுகையில் தயாரித்துக் கொண்டுபோய் பேசமாட்டேன். அப்போதுதான் மனதில் இருப்பது அப்படியே வெளியே வரும். ஆனால் இன்று காலையில் மருது கனவில் வந்து டேய் ஒழுங்கா பேசுடா என்றார். நான் யாருக்கும் கட்டுப்படாத மூர்க்கன். ஆனால் மருதுவுக்கு மட்டும்தான் கட்டுப்படுவேன். அவரிடம் எதுபற்றியும் பேசலாம். எனக்கு ஏற்படும் தடைகளின்போது சிக்கல்களின்போது நான் உபயோகிக்கும் மந்திர தாயத்து அல்லது சக்தி அவர்தான். அவர் எனக்குக் கடவுள் மாதிரி. மருது எதைப் பற்றிப் பேசினாலும் தனி உற்சாகத்துடன் பேசுவார். என் வயதில் ஒரு இருபது வயதை எடுத்து மருதுவுக்குக் கொடுக்கச் சொன்னால் கொடுத்துவிடுவேன்” என அவர் உணர்வு மயமாகப் பேசினார்.

பி.சி.ஸ்ரீராம் சுருக்கமாக அதே சமயம் மருதுவின் தீராத எனர்ஜி பற்றிப் பேசினார். கவிதாபாரதியின் பேச்சில் ஏகப்பட்ட உருக்கம். கண்ணீர். தி.நகர் ஆற்காட்டுத்தெருவில் ஓர் அறையில் இருந்தபோது நிகழ்ந்த சம்பவங்களை அவர் நினைவு கூர்ந்தபோது அரங்கில் பெரும் நிசப்தம்.

எப்போது வெண்ணிற சட்டை, நீல நிற ஜீன்ஸில் வலம் வரும் மருதுவின் ஆடையணியும் ஸ்டைல், அவர் சட்டையின் மேலிரண்டு பொத்தான்களை அணியாமல் விடும் பாணி, எங்கு வேண்டுமானாலும் பெர்முடாஸ் போட்டுக்கொண்டு கிளம்பிவிடும் தன்மை, அவரது ஓவியங்களில் இருக்கும் உயிர்ப்பு, கோடுகளில் இருக்கும் இயக்கம் ஆகியவை பற்றி விழாவில் விரிவாகவும் மகிழ்ச்சியுடனும் பேசப்பட்டது. விழாவுக்கு வந்திருந்த அனைவருமே தமிழ்ச்சூழலின் மாபெரும் ஓவியக்கலைஞரான மருதுவின் ஐம்பதாண்டு கலைவாழ்வில் தொடர்பு உடையவர்களாக இருந்ததால் விழா ஓர் குடும்ப விழாவாக மனத்தடைகள் அற்று நடைபெற்றது.

இறுதியில் விழா நாயகரான மருது பேசுகையில் பெரும் உணர்ச்சி வயப்பட்டிருந்தார். முன்னதாக தன் தந்தையார் மருதப்பனையும் தாத்தா சோலைமலையையும் நினைவு கூர்ந்த அவர், நான் ஒவியம் வரைந்து வாழ்வதற்கான சூழலை உருவாக்கி வைத்திருக்கும் என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...