அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக நாடுகளில் ஆராய்ச்சிப் பணியும் வாய்ப்புகளும்- -முனைவர் விஜய் அசோகன், ஆராய்ச்சியாளர், அயர்லாந்து 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் குமார் தேப் திடீர் ராஜினாமா: புதிய முதல்வர் யார்?

Posted : சனிக்கிழமை,   மே   14 , 2022  17:45:59 IST

திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் குமார் தேப் திடீரென இன்று தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திரிபுரா சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் நேற்று சந்தித்துப் பேசினார். இதனை தொடர்ந்து, இன்று அவர் தனது பதவியை ஒன்று ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை அம்மாநில ஆளுநர் சத்யதேவ் நரேன் ஆர்யாவிடம் ஒப்படைத்துள்ளார்.

 

இது தொடர்பாக பிப்லப் தேப் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, பிரதமர் மோடி தலைமையின் கீழ் மாநில மக்களுக்கு முடிந்த அளவிற்கு சேவை ஆற்றியுள்ளேன். இடதுசாரிகள் இல்லாத மாநிலத்தை உருவாக்கவும் முயன்றுள்ளேன்.

 

திரிபுரா சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால், கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டியுள்ளது. கட்டமைப்பு பலமாக இருந்தாலே அடுத்த முறையும் பாஜக ஆட்சி அமையும்” என்றார்.

 

உள்கட்சி பூசல் காரணமாக பிப்லப் குமார் தேப் பதவியில் இருந்து விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

திரிபுராவின் புதிய முதல்வராக அம்மாநில பாஜக தலைவராக உள்ள மாணிக் ஷா, துணை முதல்வராக இருக்கக் கூடிய ஜிஷ்ணு தேவ் வர்மா மற்றும் மத்திய அமைச்சர் பிரதிமா ஆகியோரின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

 

புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...