![]() |
ட்ரிக்கர்:திரைவிமர்சனம்!Posted : சனிக்கிழமை, செப்டம்பர் 24 , 2022 12:52:59 IST
அப்பா மீது சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைக்கும் மகனின் கதையே ட்ரிக்கர்.
படத்தின் இடைவேளை போது, பக்கத்திலிருந்தவர், ‘தம்பி உங்களுக்குப் படம் புரிந்ததா’ என்று கேட்கும் அளவிற்கு முதல் பாதி இருந்தது. புதிதாக ஏதாவது சொன்னால்தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதற்காக எதை எதையோ சொல்ல முற்பட்டு குழம்பிப் போய் இருப்பார் போல இயக்குநர் சாம் ஆண்டன்.
காவல் துறையில் பணியாற்றுபவராக நடித்துள்ள அதர்வா ஆக்ஷன் காட்சிகளில் அட்டகாசமாக நடித்துள்ளார். தன்யாவிற்கு வழக்கமான நாயகி கதாபாத்திரம் தான். முனிஸ்காந்த், சின்னிஜெயந்த், அறந்தாங்கி நிஷா ஆகியோர் வரும் காட்சிகளே ஆறுதலாக உள்ளன. அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர் போல் நடித்திருக்கும் அருண்பாண்டியன் அசாத்தியமான நடிப்பை வழங்கியுள்ளார். வில்லனாக வரும் ராகுல் தேவ் ஷெட்டி மிரட்டலான உடல்மொழியால் நடுங்க வைக்கிறார்.
ஜிப்ரான் ஆக்ஷன் படத்திற்குத் தேவையான பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார். ‘சுகுபி டூபா’ பாடல் ஓகே என்று சொல்லும் அளவிற்குத்தான் உள்ளது.
|
|