???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஸ்டாலின் உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு 0 பூரணசுந்தரிக்கு பணி மறுத்திருப்பது இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது: ஸ்டாலின் கண்டனம் 0 லக்கேஜ் டிரான்ஸ்போட்டுக்கு ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’. ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம் 0 பெண்கள் திருமண வயதை உயர்த்துவதை எதிர்த்து, முஸ்லீம் பெண்கள் அமைப்பு பிரதமருக்கு கடிதம் 0 வாழ்வா? சாவா? போட்டியில் சென்னை படுதோல்வி! 0 பீகார் தேர்தல்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி 0 மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி கடிதம் 0 ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு 0 "இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை…" தோல்வி குறித்து தோனி பேட்டி! 0 கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகள் மீட்பு 0 சூரரைப்போற்று ரிலீஸ் தள்ளிவைப்பு! 0 "இந்தியா அசுத்தமானது" விவாதத்தில் டொனால்டு டிரம்ப் 0 மருந்தை இலவசமாகக் கொடுக்கவேண்டியது அரசின் கடமை, சலுகையல்ல: மு.க ஸ்டாலின் 0 விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசு மேல்முறையீடு 0 புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல: தமிழக அரசு கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   25 , 2020  06:08:14 IST

மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவையொட்டி அரசியல் தலைவர்கள், திரை ஆளுமைகள் உட்பட பலரும் இரங்கல் கூறியுள்ளனர்.

 

பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ராகுல்காந்தி, ப. சிதம்பரம், மம்தா பானர்ஜி, தொல். திருமாவளவன், வைரமுத்து, ஏ.ஆர். ரஹ்மான், மம்மூட்டி, மோகன்லால் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட இரங்கல் குறிப்பில், "எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் துரதிர்ஷ்டவசமான இந்த மறைவு பண்பாட்டு உலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது பெயரும் புகழும் இந்தியாவை கடந்து ஓங்கிஒலித்தது. அவரது குரலும் இசையும் பல தசாப்தங்களாக ரசிகர்களை கவர்ந்தது. இந்த துயரமான தருணத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உடன் நிற்கிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

“எனது குரலாக பல ஆண்டுகாலம் ஒலித்தீர்கள். உங்களது குரலும், நினைவுகளும் என்றென்றும் என்னுடன் வாழும்” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

 

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், ”அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்” என்று கூறியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...