அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராத பழங்குடியினர் பள்ளிகள்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   28 , 2022  12:16:09 IST


Andhimazhai Image

சில தினங்களுக்கு முன்பு 10 மற்றும் 12 வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. பல மாவட்டங்களில் நம்பிக்கையளிக்கும் வகையில் அரசுப் பள்ளி குழந்தைகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். அதே சமயத்தில் பல பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் ஏமாற்றம் அளிக்கும் வகையில் தேர்வு முடிவுகள் உள்ளன. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5 உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாநில சராசரியைவிடக் குறைவாகவே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
பழங்குடியினர் நலத்துறை இயக்குநரகம் தனியாகப் பிரிக்கப்பட்டு புத்துணர்வு ஊட்டப்படும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே பரிசாக கிடைக்கிறது. பிரச்சனைகள் இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. ஆசிரியர்கள் பற்றாக்குறை, பாடத்திற்கு ஏற்ற ஆசிரியர்கள் இல்லாமை, போதிய உட்கட்டமைப்பு வசதிகள், ஆய்வக வசதிகள் இல்லாமை, போக்குவரத்து வசதிகள் போன்ற சிக்கல்கள் தொடர்ந்தவாறு உள்ளன. மேற்கண்ட பிரச்சனைகளை நியாயப்படுத்தும் வகையிலேயே தற்போதைய தேர்வு முடிவுகளும் வந்துள்ளன.
 
12 ஆம் வகுப்பில் ஆசனூா் பள்ளி 68% மற்றும் பர்கூர் பள்ளி 92% குழந்தைகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ஆம் வகுப்பில் கொங்காடை 75%, கெத்தேசால் 91%, ஆசனூா் 74%, தலமலை 44%, பர்கூர் 80% குழந்தைகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீத வீழ்ச்சியை உரிய முறையில் ஆய்வு மேற்கொண்டு வரும் கல்வியாண்டில் நிவர்த்தி செய்ய போதிய நடவடிக்கையை உரிய துறைகள் எடுக்க வேண்டும்.   
 
சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் பர்கூர் உண்டு உறைவிடப் பள்ளிக்கு 1 கோடி அளவிலான கூடுதல் பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டு பயன்பாடின்றி சிதிலமடைந்து வருகிறது. மலைவாழ் குழந்தைகளின் கற்றல் சூழலை மேம்படுத்தும் வகையில் நல்ல பள்ளி வளாகத்தைக் கட்டி பயன்படுத்தாமல் இருப்பது ஒரு வகையில் வன்முறையே.
 
பள்ளிகளில் தரத்தை, பதில் சொல்லும் கடமையை, வெளிப்படைத்தன்மையை, மக்களின் பங்கேற்பை உத்தரவாதப்படுத்தும் வகையில் அரசுப் பள்ளிகளில் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ள பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு பணிகள் பழங்குடியினர் பள்ளிகளில் நடைமுறைக்கு வந்துள்ளதா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.


கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகான சூழல் மலைவாழ் குழந்தைகளிடம் பல மடங்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்றளவும் பள்ளி திரும்பாத குழந்தைகள் ஏராளமாக உள்ளனர். இது போன்ற பிரச்சனைகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மலைப்பகுதிகளிலும் உள்ளன. உடனடி தீர்வாக மலைப் பகுதி குழந்தைகளிடம் பணி செய்யும் ஆர்வலர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர துறையினர் இணைந்து ஆக்கப்பூர்வமான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தினால் மட்டுமே தீர்வாக அமையும்.
 
அரசும் உரிய துறையும் கவனத்தில் கொள்ளுமா?   
 
முனைவர். பெர்னாட்.


  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...