???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி வன்முறை: 27 பேர் பலி; தொடரும் பதற்றம் 0 உழைப்பவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்: முதலமைச்சர் 0 தமிழக சட்டப்பேரவை மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூடுகிறது 0 இரும்பு கரம் கொண்டு அடக்கி இருக்க வேண்டும்: டெல்லி வன்முறை பற்றி ரஜினி 0 சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே: இம்ரான்கான் 0 ’பாரத் மாதா கி ஜெய்’ சொல்பவர்கள் மட்டும் இந்தியாவில் இருக்கலாம்: ஹிமாச்சல பிரதேச முதலமைச்சர் 0 வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில் இந்து பெண்ணுக்கு வளைகாப்பு! 0 சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் கைது! 0 ஆர்.எஸ்.பாரதி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்! 0 CAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் 0 டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் 0 டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி! 0  "பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்": கமல் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் 0 டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உத்தமர் உலகம் நடத்திய திருப்பலி!

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   27 , 2018  02:09:31 IST


Andhimazhai Image

பத்து ரூபாய் திருடினாலும் பத்தாயிரம் கோடி திருடினாலும் திருட்டு திருட்டு தான் என்பது உத்தமர்களின் உலகில் புழக்கம். இந்த மாதிரி நீதியுரைகளுக்கு ஒரு மதிப்பும் இருக்க முடியாது என்பதை உத்தமர்களே அறிவார்கள். என்றாலும் தனது பிழைப்பில் திருட்டு கிடையாது என்று வலிய நம்பிக் கொள்வதன் மூலம் எங்கேயாவது சிக்கிக் கொள்கிற சொம்புத் திருடனை அடித்து சாகடிக்கிற உரிமை உத்தமர்களாகிய நமக்குக் கிடைத்து விடுகிறது. கூட்டமாய் இருந்து செய்யும் போது கொலையே கூட தவறில்லை, சிம்பிள்.

 

நானும் நண்பர்களுமாய் மூன்று தடவை இப்படி கூட்டத்தில் சிக்கி இருக்கிறோம். சொல்லப் போனால் ஒரு முறை அண்ணா நகரில் மத்திய அரசு ஊழியர் குடியிருப்பில் எனது நண்பன் ஒரு வாய் தகராறில் அங்கேயிருக்கிற ஒருவனை அடித்து விட்டான். திரண்டு விட்ட ஜனங்களின் மூர்க்கம் விவரிக்க முடியாததாயிருந்தது. இத்தனைக்கும் படித்தவர்கள். அடிப்பது என்றால் அடித்து முடித்து விடாமல், போலீசிடம் ஒப்படைத்து விடாமல், உனக்கு நான் இளப்பமில்லை என்று ஒருவருக்கு மற்றவர் நிருபித்துக் கொண்டு வைத்து விளையாடினர். சொல்லப் போனால் எங்களை சுற்றி முன்னூறு நானூறு பேராவது இருந்திருக்க வேண்டும். அது ஒரு திருவிழாவாக மாறியிருந்தது. ஒரு கட்டத்துக்கு மேலே பெண்கள் எல்லாம் கூடியவுடன் இளைஞர்கள் பலரும் புத்துணர்ச்சி பெற்றனர். நண்பனின் மூக்கும் வாயும் உடைக்கப்பட்டு ரத்தம் ஒழுகியவாறிருந்தது. ஒருவன் எங்கோ தூரத்தில் இருந்து ஓடி வந்து நண்பனின் பின் மண்டையில் செங்கல்லால் தாக்கினான். நண்பன் மயக்கமடைந்து விழவே படிப்பாளிகளின் பிராக்டிக்கல் புத்தி விழித்துக் கொண்டது. ஒவ்வொருவராய் எப்படி மறைந்து போனார்கள் என்பதே தெரியவில்லை. நான் மதுவை கொலை செய்தவர்கள் கிளர்ச்சியுடன் உள்ளுர அவிழ்ந்த ஆதி மூர்க்கத்துடன் விட்டு விடுதலையாகி அவனை சந்தோஷத்துடன் கொன்றிருப்பார்கள் என்று நம்புகிறேன். நாம் அவர்களுக்கு வாழ்த்து சொல்லலாம். ஏனெனில் நமக்கும் அவர்களுக்கும் பெரிய பேதமெல்லாம் இருக்காது.

 

ஏன் இதை சொல்லுகிறேன் என்றால் நாம் நம்மைத் தவிர்த்து முழு உலகமே ஒழுக்கமாய் இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். யாரையாவது வீழ்த்த அந்த ஒழுக்க விதிகளை உபயோகப்படுத்திக் கொள்கிறோம். நம்மை மீறி உயரத்தில் எங்கோ இருக்கிறவர்களை வழிபட்டோ வசை பாடியோ திருப்திபட்டுக் கொள்கிற ஆத்திரத்துக்கு நம்மிடம் சிக்கிக் கொள்கிறவர்கள் எளியவர்கள் தான். சாலைகளில் பூக்கூடையை பூட்ஸ் காலால் எட்டி உதைக்கிற சட்டம் ஒழுங்கு எங்கே கை கட்டி நிற்குமென்பது யாவரும் அறிந்தது. ஆனால் அது நம்மை தான் பிரதிபலிக்கிறது. நமது நீதியுணர்வின் மட்டம் என்னவோ அதன்படி அந்த மலர்நீட்டம் இருக்கிறது. ஆகவே மது நமது உடமையில் இருந்து அவன் ஒரு பிடி அரிசியை அள்ளினாலும் கொல்லுவது என்கிற விதி இருந்து கொண்டே இருக்கிறது.  மேலும் வாழ்வு குறித்து நாம் கொண்டிருக்கக் கூடிய பதட்டம் கொஞ்ச நஞ்சமா.?

 

மது கொலை செய்யப்பட்டதின் அரசியல் காரணங்கள் ஒரு பக்கம் அலசப்படுவது இயல்பே. சிலர் அதற்குள் ஒளிந்து கொள்வார்கள். அது மட்டுமே காரணம் என்று சிலர் தங்களை நீதிமானாக நிறுவிக் கொள்ள முடியும். எனினும் இந்தக் கொலையில் அரசுகளுக்கு பெரும் பங்கிருக்கிறது என்பது இல்லாமல் முடியாது.    

 

ஒரு ஆதிவாசி என்றில்லை, பல தரப்புகளில் இருந்தும் புறக்கணிக்கப்படுகிறவர்கள் இருக்கவே இருக்கிறார்கள். ஒரு கட்சி என்றில்லை, எல்லா கட்சிகளும் எல்லா அரசுகளும் அவர்களை அலட்சியமே செய்கின்றன. அவர்களுடைய போராட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்படும். அவர்களுடைய இருப்பே கூட பல சந்தர்ப்பங்களில் ஒளித்து வைக்கப்படும். அவர்களை மௌனிக்க செய்ய வேண்டிய தருணத்தில் போலீசார் கட்டற்ற சுதந்திரத்தை எடுத்துக் கொண்டதை நாமொன்றும் கண்டித்துக் கொண்டிருந்தது கிடையாது.  விழிப்புணர்வு வர வேண்டும், போராட்டம் வெடிக்க வேண்டும், கிழக்கில் விடிவெள்ளியோ மற்றொன்றோ முளைக்க வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை.

 

ஆயின்,,கடல் வற்றி கருவாடு கிட்டுகிற காலம் வரை மதுவைப் போன்றவர்கள் செத்துக் கொண்டு தான் இருப்பார்கள் என்கிற முடிவுக்கு நாம் வராமலிருந்தால் சரி. ஒரு வசதிக்கு சில நீதிகளையுணர கொஞ்ச காலம் சத்திய சோதனைகளை மூட்டை கட்டி விட்டு மணியன் பிள்ளைகளை பயிலலாம் என்று படுகிறது.      

 

- மணி.எம்.கே.மணிclick here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...