???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மெரினாவில் அசாம் இளைஞர்கள் போராட்டம்! 0 ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குக: ராமதாஸ் 0 உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு 0 மாணவர்கள் மீது தடியடி: ஸ்டாலின் கண்டனம் 0 டெல்லி: தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம் 0 FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்! 0 அமித்ஷாவுக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய வீராங்கனை 0 உண்ணாவிரதம் இருந்த மகளிர் ஆணைய தலைவர் மருத்துவமனையில்! 0 சீனாவுடனான வர்த்தக போர் நிறுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு 0 திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு 0 அதிமுக வேட்பாளர்கள் 2-வது பட்டியல் வெளியீடு! 0 சச்சினுக்கு ஆலோசனை கூறிய சென்னை ஓட்டல் ஊழியர் 0 ஃபாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் 0 உள்ளாட்சி தேர்தல்: தொண்டர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம் 0 ராகுலை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்மிருதி இரானி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   14 , 2019  22:47:03 IST

கோவையில் இருகூர் அருகே உள்ள ராவுத்தர் பாலம் இருப்புபாதையில் நள்ளிரவு 12 மணியளவில், சூலூர் தனியார் கல்லூரி மாணவர்கள் 4 பேர் மது அருந்தியுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஆலப்புழா-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், இவர்கள் மீது மோதிய விபத்தில், 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்த போத்தனூர் காவல்துறையினர், மாணவர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த கல்லுரி மாணவர்கள் கொடைக்கானல் பகுதியை சேரந்த சித்திக்ராஜா, ராஜபாளையத்தை சேர்ந்த கருப்பசாமி, கவுதம் மற்றும், நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த ராஜசேகர் என தெரியவந்தது.

கல்லூரி படிப்பை முடித்த இவர்கள் தங்கள் அரியர்ஸ் தேர்விற்காக கல்லூரிக்கு வந்ததாகவும், அவர்கள் இருப்புபாதையில் மது அருந்தியபோது ரயில் மோதி உயிரிழந்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...