![]() |
பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க மறுப்பு!Posted : செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19 , 2021 08:37:04 IST
குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்தப்போவதாக அறிவித்துள்ள ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் எனும் மத்திய அரசின் கோரிக்கைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
குடியரசு தின அணிவகுப்பை சீர்குலைக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளதாகவும், ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் விவசாயிகளின் பேரணிக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.
|
|