???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரபேல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை: சர்ச்சை 0 போலி விவசாயிகள் பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு; இதுவரை 60 பேர் கைது 0 வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததற்காக பாராட்டா? பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா?: தங்கம் தென்னரசு 0 தன்னை பற்றிய விவரங்களை 3-ம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா சிறைத்துறைக்கு கடிதம் 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

2019-ன் டாப் 10 குத்துப் பாடல்கள்!

Posted : புதன்கிழமை,   ஜனவரி   01 , 2020  06:56:19 IST


Andhimazhai Image
கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் 200-க்கும் அதிகமான திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதில் ஏறக்குறைய 30 படங்கள் மட்டும்தான் சொல்லிக்கொள்ளும்படி போயிருக்கின்றன. படங்களின் பட்டியல் இப்படியென்றால் பாடல்கள் எப்படி இருந்தன என்ற கேள்வி வரலாம். நிறைய நல்ல பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த ஆண்டாகவே 2019 இருந்தது. அதில் குறிப்பாக டாப் 10 குத்து பாடல்கள் எவையென்று இப்போது பார்க்கலாம்.
 
கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பொங்கலுக்கு இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் வந்தன. பேட்ட, விஸ்வாசம். இரண்டுமே வசூலில் பெரும் வெற்றி. அனிருத் இசையில் பேட்ட, டி. இமான் இசையில் விஸ்வாசம் இரண்டிலும் பாடல்கள் ஹிட். இதிலிருந்து டாப் 10 குத்து பாடல்கள் வரிசையை தொடங்கலாம்.
 
பேட்ட - மரணமாஸ்
 
பேட்ட படத்தின் எல்லா பாடல்களும் ஹிட் தான் என்றாலும் முதல்முதலில் வெளியாகி குத்தாட்டம் போட வைத்த பாடல் 'மரணமாஸ்'. ப்ரமோ வீடியோவில் தொடங்கி இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்தது. எஸ்.பி. பாலசுப்ரமணியம், அனிருத் ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர்.
 
 
விஸ்வாசம் - அடிச்சுத்தூக்கு
 
டி. இமான் இசையில் விஸ்வாசம் படம் வந்தபோது தல ரசிகர்கள் அனைவரும் அடிச்சுத்தூக்கு பாடல் மூலம் படத்தை கொண்டாடினார்கள். டி. இமான் இதனை பாடினார். 'கண்ணான கண்ணே' பாடல் தான் ஹிட் அளவில் பெரிது என்றாலும், குத்து பாடல்கள் என்பதால் அடிச்சுத்தூக்கு வரிசையில் இடம்பெற்றிருக்கிறது.
 
பிகில் - வெறித்தனம்
 
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் விஜய் படம் எப்போதும் ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டம் தான். வெளியாவதற்கு முன்னரே விஜயின் குரலில் 'வெறித்தனம்' பாடலுக்கு வரவேற்பு கிடைக்க தொடங்கியிருந்தது. கடந்த ஆண்டில் விஜய் பட பாடல் என்றால் அதற்கு வேறு மாற்றே இல்லாத அளவுக்கு இப்பாடல் செட் ஆகிவிட்டது.
 
 
நம்ம வீட்டுப் பிள்ளை - காந்த கண்ணழகி
 
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் 'குமுறு டுப்பரு' சொல்லிக்கொண்டு சுத்தும்படி செய்த பாடல் நம்ம வீட்டுப் பிள்ளை 'காந்த கண்ணழகி'. அனிருத், நீத்தி மோகன் இப்பாடலை பாடினார்கள். சிவகார்த்திகேயன் படத்துக்குரிய கலகலப்பும், குறும்புத்தனமான நடனமும் இப்பாடல் பெரிய ஹிட் ஆனதற்கு கூடுதல் பலம். 
 
 
காப்பான் - சிறுக்கி
 
'காப்பான்' பட கதைக்கு சம்மந்தம் இல்லாத ஓப்பனிங் சாங் தான். எனினும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அட்டகாசமான ஃபோக் பாடல், ஆட்டம், திருவிழா செட் என 'சிறுக்கி' பாடல் கொண்டாடப்பட்டது. செந்தில் கணேஷ் இதனை பாடினார்.
 
 
கோமாளி - பைசா நோட்டு
 
கடந்த ஆண்டில் மாஸ் ஹீரோக்கள் படங்களின் அளவுக்கு எந்தவகையிலும் குறைவில்லாமல் வெற்றி கண்டது கோமாளி. மற்ற பாடல்களை விட 'பைசா நோட்டு' வரவேற்பை பெற்றது. வழக்கமான குத்து பாடலிலிருந்து மாறுபட்ட பெப்பி நெம்பராக இதனை கொடுத்திருந்தார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. அவரும் கௌஷிக் க்ரிஷும் இணைந்து பாடலை பாடினர்.
 
 
சங்கத்தமிழன் - கமலாகலாசா 
 
 
விஜய் சேதுபதியின் சமீபத்திய படங்களில் எதிர்பார்த்த அளவை பூர்த்தி செய்யாத படம் சங்கத்தமிழன். எனினும் விவேக் - மெர்வின் இசையில் 'கமலாகலாசா', படம் வெளியாவதற்கு முன்னரே ஹிட் அடித்த பாடலாக அமைந்தது. விவேக் சிவா, சஞ்சனா ஆகியோர் பாடிய பாடல் இது.
 
 
நட்பே துணை - சிங்கள் பசங்க 
 
 
ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து அவரே இசையமைத்த படம் 'நட்பே துணை'. இதில் வந்த 'சிங்கள் பசங்க' பெரும்பான்மையான சிங்கள் பசங்களின் ரின் டோன், காலர் டியூனாக மாறியது. பாலசந்தர், கானா உலகம் தரணி, அறிவு ஆகியோர் இப்பாடலை பாடினார்கள்.
 
ஏ 1 - சிட்டுக்கு
 
சந்தானம் நடிப்பில் வெளியான 'ஏ 1' படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். கானா ஸ்டைலில் குத்து பாடல் தருவது அவருக்கு கைவந்த கலை. அந்த வகையில் சந்தோஷ் நாராயணன் பாடிய இப்பாடல் தாளம் போட வைத்தது.
 
 
மிஸ்டர் லோக்கல் - 'டக்குனு டக்குனு'
 
கடந்த ஆண்டில் சிவகார்திகேயனுக்க சறுக்கலாக அமைந்தது மிஸ்டர் லோக்கல். அதிலிருந்து எழுந்துதான் அடுத்தடுத்து இரண்டு ஹிட் கொடுத்தார். 'டக்குனு டக்குனு' பாடல் மட்டும் இப்படத்தில் சற்று ஆறுதல். ஹிப் ஆப் தமிழா ஆதி இசையில் அனிருத் இப்பாடலை பாடினார்.
 
 
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...