???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை- 11 நூலகத்தில் பிடித்த பேய்!- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 கேரள நிலச்சரிவு சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு 0 EIA 2020 வரைவு ஆபத்தானது: ராகுல் காந்தி 0 ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி 0 தமிழகம்:5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு 0 கனிமொழியை நீங்கள் இந்தியரா என கேட்ட பாதுகாப்பு அதிகாரி! 0 ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு 0 இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே 0 கர்நாடக அணைகளிலிருந்து 90 ஆயிரம் கன அடி நீர் திறப்பு! 0 ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் E-Passக்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் 0 புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தாதீர்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்! 0 நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்: அமைச்சர் ஜெயக்குமார் 0 நடிகர் சஞ்செய் தத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி 0 கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பங்குச் சந்தையில் இன்று - 22.10.2012

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   22 , 2012  07:24:41 IST

கடந்த இரண்டு வாரங்களாகவே ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஊசலாடிக் கொண்டிருக்கும் பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் 111 புள்ளிகள் உயர்ந்து 18793 லும் Nifty 32 புள்ளிகள் உயர்ந்து 5717 லும் முடிவடைந்தன. அக்டோபர் 30 ஆம் தேதி வெளிவரவிருக்கும் ரிசர்வ் வங்கியின் பொருளாதார கொள்கையின் மீள்பார்வை அறிக்கைக்கு பின்னர்தான் இந்த ஊசலாட்டம் நிறைவுபெறும் என்று நம்பப் படுகிறது. Nifty 5800 என்ற தடையைத் தாண்டி உச்சிக்குப் போவதும் 5600 என்ற ஆதாரத்தைத் தாண்டி பாதாளத்தில் வீழ்வதும் இந்த அறிக்கையைப் பொறுத்தே அமையும். அது மட்டும் இல்லாமல் Derivatives காலாவதி நாளான அக்டோபர் 25 க்கு இன்னும் 3 தினங்களே இருப்பதும்  இந்த தேக்க நிலைக்கு ஒரு காரணம்.

L &T நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டிற்கான நிதி நிலை அறிக்கை இன்று வெளியானது. நிகர லாபம் 42 .5 சதவிகிதம் அதிகரித்து பங்கின் விலையை 52 வார புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றது. மென்பொருள் நிறுவனமான TCS ன் இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையும் எதிர்பார்ப்பை மீறிய லாபம் காட்டி நிறுவனத்தின் பங்குக்கு இன்றைய சந்தையில் கதாநாயக அந்தஸ்து வாங்கிக் கொடுத்தது.

ICICI , HDFC , ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் நிறுவங்களின் பங்குகள் விலை உயர்ந்தும் ITC , ஜிண்டால் ஸ்டீல்ஸ், ஹீரோ மோடோ கார்ப் , டாட்டா மோட்டார்ஸ் பங்குகள் விலை குறைந்தும் வர்தகமாயின. மொத்தத்தில் தேசிய பங்கு சந்தையில் 666 பங்குகள் விலை உயர்ந்தும் 756 பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன.


English Summary
Review of RBI's monetary policy which is scheduled on 30th october 2012 will put an end to this range bound trading.

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...