அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை - திருச்சி சிவா பேட்டி! 0 அதிமுக கூட்டணி: தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவா? 0 சட்டசபைக்கு குதிரையில் வந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ! 0 வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ! 0 ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு! 0 கொங்குநாடு மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள்? 0 திமுக கூட்டணியில் இடம்பெறுகிறாரா கருணாஸ்? 0 சட்டமன்றத் தேர்தல்: தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் வாக்குப் பதிவு எந்திரங்கள்! 0 ஆண்கள் தினத்தையும் கொண்டாட வேண்டும் - பாஜக எம்பி! 0 பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது - விசிக! 0 திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்! 0 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி! 0 அப்துல் கலாம் மூத்த சகோதரர் முகமது முத்து மரைக்காயர் மறைவு 0 பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடியது 0 துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நீரியல் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் - சூழல் ஆர்வலர்கள்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   22 , 2021  19:38:25 IST


Andhimazhai Imageசென்னை துறைமுகம் முதல் பழவேற்காடு வரை உள்ள பகுதியை நீரியல் சரணாலயமாக அறிவிக்கவேண்டும் என்று சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
 
சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி தனியார் துறைமுகத்தை விரிவாக்குவது தொடர்பாக இன்று மீஞ்சூரில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் இத்திட்டத்தால் மீன்பிடி, விவசாயம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. சுற்றுச்சூழல் அணியின் சார்பில் சென்னை, மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் நேற்று மாலை இது குறித்து ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டது. பழ.செல்வகுமார் ஒருங்கிணைத்தார். பாதிக்கப்படக்கூடியதாகக் கருதப்படும் பகுதியைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள், மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துகளை முன்வைத்தனர்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பொறியாளர் சுந்தர்ராஜன்:

”சென்னையில் அழகிய கடற்கரை இருப்பதாக நாம் மகிழ்ச்சி அடைகிறோம். 1850-க்கு முன்னர் இந்தக் கடற்கரை இங்கு இல்லை. கடலுக்கும் ஆற்றுக்கும் இடையிலான கழிமுகப்பகுதியாகத்தான் மெரினா இருந்தது. சென்னை துறைமுகத்துக்காக தோண்டியெடுத்த மண்ணைக் கொட்டிதான் இந்தக் கடற்கரை உருவானது. துறைமுகத்தை ஒட்டி நல்லதண்ணீர் ஓடைக் குப்பம் என்கிற கிராமம் இருக்கிறது. அந்த ஊருக்குப் பேர் சொல்லும் ஒரு கோயில் இப்போது கடலுக்குள் இருக்கிறது. ஊரின் பெயர் என்ன..யோசித்துப் பாருங்கள்! கடலில் கைவைத்தால் அது திருப்பி அடிக்கும். மொத்த ஜெர்மன் நாட்டிலும் சேர்த்து 3 துறைமுகங்கள் இருக்கின்றன. சென்னை நகரில் மட்டுமே மூன்று துறைமுகங்கள்..!  


இப்போது காட்டுப்பள்ளி துறைமுகத்தை 320 ஏக்கர் பரப்பிலிருந்து 6,200 ஏக்கராக விரிவாக்கப் போகிறார்கள். 20 சதவீதம் அல்ல, 20 மடங்கு.! ஏற்கெனவே இங்கு கடலரிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. காயலாஞ்சி எனும் ஊரில் மட்டும் ஆண்டுக்கு 20 மீட்டர் அதாவது 60 அடி கடல் நீர் ஊருக்குள் வந்தபடி இருக்கிறது.


புதிய திட்டத்துக்காக கடலுக்குள் மட்டும் 6 கிமீ நீளத்துக்கு 2000 ஏக்கர் பரப்பில் மண்ணைக் கொட்டப் போகிறார்கள்.. இந்தத் திட்டம் வந்தால் ஒரு கட்டத்தில் பழவேற்காடு ஏரியும் கடலும் ஒன்றாகிவிடும். தமிழ்நாடு, ஆந்திரம் இரண்டு மாநிலங்களிலும் இந்த ஏரியை ஒட்டியுள்ள 82 கிராமங்கள் இதனால் முழுவதுமாக பாதிக்கப்படும். ஒன்றரை லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக நின்றுபோகும். இதனால் யாருக்கோ எங்கோதானே பாதிப்பு என நினைத்தீர்கள் என்றால் அது பெரும் தவறு..
பழவேற்காடு ஏரிதான் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி..அது இருப்பதால்தான் கடல் நீர் மேற்கொண்டு நிலத்திற்குள் புகாமல் தடுக்கமுடிகிறது; நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் தண்ணீரை சென்னை நகரத்துக்கு எடுத்துக்கொள்ள முடிகிறது. வெள்ள வடிகாலாகவும் இது இருக்கிறது. கொற்றலை ஆற்றுக்கும் கடலுக்குமிடையே சில கிமீ தொலைவுக்கு இருந்த கடற்கரை இப்போது சில நூறு மீட்டராகக் குறைந்துவிட்டது. புது திட்டம் வந்தால் கடலரிப்பு அதிகமாகி கொற்றலையாறும் கடலும் கலந்துவிடும். மும்பை நகரமானது படிப்படியாக கடலால் அரிக்கப்பட்டு அதற்கு அழிவு கடலால்தான் என்பதைப்போல, சென்னைக்கு அழிவு மழையால்தான் என்றும் ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள். எனவே 35 லட்சம் மக்கள் சென்னை பகுதியில் வெள்ள அபாயத்தில் சிக்குவார்கள்.


இதைத்தவிர பழவேற்காடு ஏரியானது நூற்றுக்கணக்கான பறவை வகைகளுக்கான இருப்பிடமாக உள்ளது. மீன் வகைகள் மட்டும் இங்கு 165 இருக்கின்றன. நண்டுகள், மெல்லுடலிகள் போன்ற இன்னும் ஏராளமான உயிரினங்களும் அங்கு உண்டு. மிகவும் அரிய உயிரியப் பன்மையம் இருக்கின்ற இடம், அது. இவையெல்லாம் அழிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைப் புரிந்துகொள்வதற்கு எல்லாரும் அங்கு நேரில் போய் பார்க்கவேண்டும்.. அந்த இடம், அவ்வளவு அழகான இடம்.. அதற்காகவும் ஒரு முறை கட்டாயம் போய்வரலாம்.

தமிழகத்தில் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி மூன்று துறைமுகங்களிலும் சேர்த்து கையாளும் திறன் 272 மில்.டன். ஆனால் நடப்பில் 122 மில். டன் சரக்கைத்தான் அவர்களால் கையாளமுடிகிறது. அவ்வளவுதான் இருக்கிறது. அதாவது 40 % அளவு திறனைத்தான் மூன்று இடங்களிலும் சேர்த்தே பயன்படுத்தமுடிகிறது. ஆனால் அதானியின் துறைமுகத் திறனோ 320 மில்.டன். இது எப்படி... ஒரு கட்டத்தில் என்ன ஆகும்? அரசுக்குச் சொந்தமான துறைமுகங்கள் வருவாய் இழக்கும்;இழுத்து மூடப்படும். எந்த அனுபவமும் இல்லாத அதானி குழுமத்துக்கு 12 விமானநிலையங்களை  தாரைவார்த்தார்கள்தானே? எண்ணூர் காமராசர் துறைமுகத்தையும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தையும் மூடிவிட்டு அதானி வீரசாவர்க்கர் துறைமுகம் வந்தாலும் வியப்படைய வேண்டியதில்லை.

இதைத் தடுக்கவேண்டுமானால், சென்னையின் இந்தப் பகுதியை நீரியல் சரணாலயமாக அறிவிக்கவேண்டும். இதுதான் சென்னையைக் காப்பாற்றும். திமுக கூட்டணிக் கட்சிகள் இதற்காகக் குரல்கொடுக்க வேண்டும்.“
 
இளைஞர் இயக்கம் நிறுவனர் மருத்துவர் எழிலன்:

”காலத்துக்கேற்ப அரசியல் கட்சிகள் தங்களை காலத்துக்கேற்ப புதுவார்ப்பு செய்துகொள்ளவேண்டும். அப்படிப்பட்டவைதான் மக்களிடம் நிற்கும். திமுக தன் சாதனைகளை அறிவிப்பு செய்கிறது. அதிமுக தன் அறிவிப்புகளை சாதனையாகச் சொல்கிறது. மாநில உரிமைகளைப் பறித்து அவற்றைத் தனியாருக்கு தாரைவார்ப்பதை 10 ஆண்டுகளாக வேடிக்கைபார்த்துவருகிறது. இந்த ஆட்சி மேலும் 5 ஆண்டுகள் நீடிக்குமானால் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கே வந்துவிடும். தென்னகத்தில் தமிழ்நாட்டில்தான் கடலோரப்பகுதிகளில் மக்களின் குடியிருப்புகள் அதிகமாக இருக்கின்றன. துறைமுகங்கள், கூடங்குளம் அணு உலை போல பல திட்டங்களால் கடலோர மக்களை படிப்படியாக வாழ்விடத்திலிருந்து அகற்றிவருகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை விசாகப்பட்டினம் துறைமுகம், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம். எல்லைப் பகுதிகளில் சிறு மோதல் என்றாலும் விசாகப்பட்டினத்தில் தயார்நிலைப் பயிற்சியில் ஈடுபடுவார்கள். அங்கு வர்த்தகத் துறைமுகத்தை அதானி குழுமத்துக்கு கொடுத்திருக்கிறார்கள். ஏற்கெனவே இராணுவத் தளவாட இணைப்புச் சாலைத் திட்டம் வந்துவிட்டது. ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்வது முக்கியமாகி, அதற்கான துறைமுகமாகக்கூட உருவாக வாய்ப்புண்டு. மருத்துவராக என்னை வருத்தும் ஒரு சேதி, வடசென்னை அதாவது ஒரிஜினல் சென்னை பகுதியில் மிக அதிகமாக போதைப்பொருள் புழக்கம் பரவியிருப்பது..! இது போன்ற திட்டங்கள் வந்தால் குரல்கொடுக்க, நியாயம்கேட்க இளைஞர்கள்தானே வரவேண்டும். அப்படி வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இப்படிச் செய்கிறார்கள்.   அடிபட்டபிறகு வைத்தியம் பார்த்துவந்த நமக்கு கொரோனா நல்ல படிப்பினையைத் தந்திருக்கிறது.”

சென்னை ஆதரவுக் குழுவின் செயற்பாட்டாளர் நித்யானந்த்:

”மண்ணை மூடும் செயல்பாடுகளை எதிர்த்து மக்கள் போராடிவருகிறார்கள். மண்ணை மூடும் பொருளாதாரத்தை இங்கு கொண்டுவர முயல்கிறார்கள். ஆனால் மண்ணை மூடாத பொருளாதாரத்தை நாம் ஆக்கவேண்டும். ஒரு வெளியாக இருக்கும் மண்ணை புறம்போக்கு என இழிவுபடுத்துகிறோம். அதுதான் மக்களுக்கான பொருளாதாரத்தைத் தருகிறது. அதானிகள் மட்டும் நமக்கு வில்லன்கள் அல்ல; நம்முடைய பண்பாட்டு எண்ணங்களும்தான் நமக்கு வில்லன்கள். இந்த விரிவாக்கத் திட்டத்தால் பொதுப்படையாக சில பிரிவினர்களின் பாதிப்பை மட்டும் கவனிக்கிறோம். இதில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் வலையில்லாமல் கைகளாலேயே மீன் வகைகளை, நண்டுவகைகளைப் பிடித்து வருவாய் ஈட்டுகிறார்கள். குறிப்பாக துணையை இழந்த பெண்கள், தனித்துவாழும் முதிய பெண்கள், வறிய நிலையில் உள்ள பெண்களே இதில் முக்கியமாக இருக்கிறார்கள். பல கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் மேய்ச்சல் நிலத்தை நம்பியுள்ள ஆடு, மாடுகளை மேய்ப்பவர்களும் முற்றிலுமாக பாதிக்கப்படுவார்கள். அவர்களில் கணிசமானவர்கள் வயதானவர்கள். வாழ்வாதாரம் பறிபோனால் அவர்களுக்கு வழி என்ன? ஐடி பொருளாதாரத்தைப் பற்றி அங்கலாய்ப்பவர்கள், ஐடி தொழிலால் அழிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தந்த பொருளாதாரத்தை பார்க்கமறுக்கிறார்கள். நீரியல் சரணாலயம் எனும் கோரிக்கையுடன் இன்னொன்றையும் சேர்க்கவேண்டும். நீரியல் சரணாலயம் என ஆக்கும்போது நீர்நிலைகள் உள்ள இடங்களை அப்படியே சரணாலயம் என அறிவிப்பதில் நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. அந்தப் பகுதி வனத்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டால், காலம்காலமாக அங்கு மீன்பிடியில் உள்ளவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும் நிலை இருக்கிறது. எப்படி காவிரி வேளாண் சிறப்புப் பாதுகாப்பு மண்டலம் எனச் சொல்கிறோமோ அதைப்போல இதை மீன்பிடி சிறப்பு மண்டலமாகவும் ஆக்கவேண்டும். அப்போதுதான் இயற்கைவளத்துடன் மக்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.“
   
திமுக சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் கார்த்திகேய சேனாதிபதி:  

” இதற்கு முன்னர் இருந்த தலைவர்கள் காலத்தில் எல்லாம் சூழல் பாதிப்புகளை உண்டாக்கக்கூடிய சில தொழில்வாய்ப்புகள் இருக்கத்தான் செய்தன. ஆனாலும் காமராசரோ கருணாநிதியோ ஜெயலலிதாவோ அப்படி செயல்படவில்லை. ஆனால் இப்போதைய ஆட்சியாளர்கள் மத்திய அரசுக்கு அடிமைத்தனமாக நடந்துகொண்டு இங்குள்ள இயற்கை வளங்கள் பாதித்தாலும் கண்டுகொள்ளாதபடி இருக்கிறார்கள். எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறார்கள் என்றால், எட்டுவழிச் சாலைக்கான முன்வைப்பில் சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டத்தின் வரைவு அறிக்கையை அப்படியே காப்பியடித்து இங்கே தந்திருந்தார்கள். சீன கிராமங்களின் பெயர்கள்கூட அப்படியே வந்து நகைப்புக்கு இடமானது. அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு விசயம் இல்லை. அதிகமாக சோப்புப் போட்டு குளிப்பதால்தான் ஆற்றில் நுரை வருவதாகச் சொல்லும் சுற்றுச்சூழல் அமைச்சரும் அரசு விழாவில் பலூனில் ஊசி குத்தும் அமைச்சரும் இருந்தால் நாடு எப்படி இருக்கும்? சிறுவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்பூட்டலைச் செய்யும் பணிகளில் ஈடுபடவேண்டும் என்பதும் எங்களின் திட்டம்.“   

நிறைவாக, கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தத் திட்டத்துக்காக அமைக்கப்படும் சாலையால் வளமான நஞ்சை நிலங்கள் உள்பட ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பயிர்நிலங்களும் அழிக்கப்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...