???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி! 0 ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு 0 எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து செயல்பாட்டுக்கு அரசு உதவும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் 0 "ஆளுநர் மௌனம் காப்பது ஏன்?": அற்புதம் அம்மாள் கண்ணீர் 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி 0 குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   13 , 2018  06:48:06 IST

குரூப் 2 பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1199 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2 தேர்வு நேற்று நடைபெற்றது. பொது அறிவு பிரிவில் திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
 
அதற்கு விடையாக அளிக்கப்பட்ட 4 பதில்களில் காந்திஜி, ராஜாஜி மற்றும் அண்ணா ஆகிய தலைவர்களின் பெயர்கள் சரியான முறையில் அச்சிடபட்டுள்ள நிலையில், பெரியார் பெயர் மட்டும் சாதியுடன் அச்சிடப்பட்டது ஏன்? என கேள்வி எழுந்துள்ளது. இதன் மூலம் தந்தை பெரியார் பெயர் அவமதிக்கப்பட்டு உள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது.
 
மேலும், தந்தை பெரியாரின் பெயரை மட்டும் சாதி பெயரோடு சேர்த்து அச்சிட்டதோடு ஈ.வெ.என்பதற்கு பதிலாக இ.வெ.ராமசாமி நாயக்கர் என குறிப்பிட்டது கண்டனங்கள் எழுந்தது. இதற்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்கள் எழுந்தது.
 
இந்நிலையில் குரூப்-2 வினாத்தாளில் பெரியார் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு டிஎன்பிஎஸ்சி வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் குரூப்-2 தேர்வில் பெரியாரின் சாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில் நடந்தது தவறு தான் என்றும் இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது என்றும் டிஎன்பிஎஸ்சி சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...