???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்" 0 யார் பாதிக்கப்பட்டிருக்கா சொல்லுங்க: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு தமிழர் தரப்பு ஆதரவு

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   08 , 2019  02:16:12 IST


Andhimazhai Image
இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
 
எதிர்வரும் நவம்பர் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச போட்டியிடுகிறார். இதேபோல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக  மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச நிறுத்தப்பட்டிருக்கிறார். இவர்களோடு மக்கள் விடுதலை முன்னணியின் அநுர குமார திசநாயக்க, இலங்கை சோஷலிச கட்சியின் அஜந்தா பெரேராவும் ஆகியோர் காலத்தில் உள்ளனர்.
 
அதிபர் தேர்தலில் தமிழர்கள் தரப்பு அரசியல் இயக்கமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிக்கும் என்றே எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது.
 
இந்நிலையில், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
 
அதில், "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட முழுமையான ஒத்துழைப்பு இருந்தும், ராஜபக்ச அரசாங்கம் தேசிய பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளைக் கைவிட்டது.. நாட்டில் வாழ்வதற்கு உதவக்கூடியதாக அனைத்து மக்கள் மத்தியிலும் ஒற்றுமையை ஊக்குவிக்கத் தவறியது. ஆட்சி அதிகாரங்களைப் பகிர்வதற்கான தற்போதுள்ள ஏற்பாடுகளை வலுவற்றதாக்குவதற்கும் குறைப்பதற்கும் அரசாங்கம் மேலும் முயற்சித்தது. ஆட்சி அதிகாரங்களைப் பகிர்வதை அரசியலமைப்பு ரீதியாக மேம்படுத்துவதற்கும் அதனை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதற்கும் உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திலுள்ள பல அமைப்புகளுக்கும் அது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் அரசாங்கம் தவறியது.
 
மற்ற முக்கிய வேட்பாளரான சஜித் பிரேமதாசவினதும் அவர் சார்ந்த அரசியல் இயக்கத்தினதும் செயலாற்றுகை அத்தகைய முறைப்பாட்டிற்கு இடம் வைக்கவில்லை. மாறாக, அவர்கள் அந்நடைமுறையை முன்னெடுத்துச் செல்வதற்கு தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
 
இவ்வனைத்துக் காரணிகளையும் கவனத்தில் கொண்டு, குறிப்பாக முக்கிய முனைகளில் அவர்களது முன்னைய செயற்பாடுகளையும் அவரவர் தேர்தல் அறிக்கைகளின் அடிப்படையிலான எதிர்காலச் செயற்பாடுகளையும் கவனத்தில் கொண்டு, தமிழத் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களை அன்னம் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையில் தமிழர்கள் மிகுதியாக வாழும் வடக்கு மாகாணத்தில் 8.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் . கிழக்கு மாகாணத்தில் 12 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ( இஸ்லாமியர், சிங்களர் சேர்த்து). எனவே இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய அணியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு அதிபர் தேர்தலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...