அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மத்திய அரசு அனுமதி அளித்ததும் முதல் மாநிலமாக குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்ரமணியன்

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   14 , 2021  11:40:00 IST

கோவை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு கவனிப்பு பிரிவினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று துவக்கி வைத்தார். மேலும் அரசு மருத்துவமனை வளாகத்தில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியம், ‘உலக கை கழுவும் தினம் அக்டோபர் 15ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் நிகழ்வை கோவையில் தொடங்கி வைத்தாகவும் தெரிவித்த அவர், சற்றே குறைப்போம் திட்டத்தையும் தொடங்கி வைத்துள்தாகவும் உப்பு, சர்க்கரை, எண்ணை போன்றவற்றை உணவில் குறைக்கும் விழிப்புணர்வு மற்றும் உபரி உணவுகளை வீணக்காமல் உபயோகப்படுத்தும் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்தார்.
 
தொடர்ந்து பேசிய அவர், ‘2 வயது முதல் 18 வயசுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு உத்தரவு அளித்தவுடன் முதல் மாநிலமாக தமிழ்நாடு பணிகளை தொடங்கி விடும் எனவும் பண்டிகை காலம் என்பதால் வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது எனவும் தெரிவித்தார்.
 
மேலும் மத்திய அரசு நிபுணர் குழு ஆய்விற்கு பிறகு மருத்துவப்படிப்பிற்கான கூடுதல் இடங்களைக் கேட்டு பெறுவோம் எனவும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...