???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்! 0 நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு! 0 கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி 0 வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை! 0 பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 0 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் 0 நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை 0 சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் 0 கீழடி ஆய்வறிக்கை: அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஸ்டாலின் பாராட்டு 0 தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர் 0 பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மிகவும் அரிதான நிகழ்வு: சென்னை, வடதமிழக கனமழை பற்றி ‘தமிழ்நாடு வெதர்மேன்’

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஆகஸ்ட்   18 , 2019  23:14:12 IST

சென்னை மற்றும் பல வடதமிழக மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை, பகலிலும் வலுவிழக்காமல் தொடர்ந்தது. இது குறித்து பிரபல வானிலை கணிப்பாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான், தனது முகநூல் பக்கத்தில், “தொடர்ந்து இரண்டாவது நாளாக சென்னை நகரில் பரவலான மழை பெய்து வருகிறது. மிகவும் அரிதான நிகழ்வு இது. தற்போது நிலை கொண்டிருக்கும் மேகக் கூட்டங்கள் தொடர்ந்து அதே இடத்தில் இருக்கும். இதனால் தொடர்ந்து மழை பெய்யும்.

வட தமிழகத்தில் நல்ல மழை பெய்து வரும் இந்நேரத்தில் மேற்கு வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பொழிவு இருக்கிறது. நேற்று தென் மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மழை பெய்தது.

சென்னையைப் பொறுத்தவரை 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான், பகலில் இவ்வளவு மழை பெய்துள்ளது. இந்த மழை பொழிவு தொடரும்” என்று தகவல் தெரிவித்துள்ளார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...