???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'

Posted : ஞாயிற்றுக்கிழமை,   பிப்ரவரி   16 , 2020  10:51:46 IST

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை, பிற்பகலில் ஏராளமான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் இரவிலும் தொடர்ந்த நிலையில், கூட்டம் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார் தடியடி நடத்தினர். இதில், போராட்டக்காரர்கள் 5 பேரும், மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமாரி உள்பட காவலர்கள் நான்கு பேரும் காயமடைந்தனர்.

போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டவர்களிடம் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பேச்சு வார்த்தை நடத்தினார். அவரது சமாதானத்தை ஏற்காமல் மூன்றாவது நாளாக போராட்டத்தைத் தொடர்கின்றனர். தமிழக சட்டப் பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துளளனர். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இந்திய இறையாண்மையைக் காப்போம் என்ற முழக்கத்துடன், பேரணி நடைபெற்றது. அதில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.பின்னர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் தமைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுவதுடன், தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டை கொண்டுவர மாட்டோம் என மத்திய அரசு உறுதியளிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...