அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெ. மறைவுக்குப் பிறகு ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் முயன்றார்- முதல்வர் குற்றச்சாட்டு 0 டிராக்டர் பேரணிக்கு தயாராகும் விவசாயிகள் 0 தமிழகத்தில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் ராகுல்! 0 இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களை ஆராய புதிய குழு 0 சூர்யாவைப் பின்னுக்குத் தள்ளிய புலிக்குத்தி பாண்டி 0 டிவிட்டரில் அசுரனாக மாறிய தனுஷ் 0 பா.இரஞ்சித் படத்தில் ஹீரோவான யோகிபாபு 0 நீரியல் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் - சூழல் ஆர்வலர்கள் 0 சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு 0 சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை 0 சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   22 , 2019  23:51:01 IST

இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 25ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவான 48 மணி நேரத்தில் வலுப்பெற்று மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால் மழைக்கான சாத்திய கூறுகள் உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே போல் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மற்றும் பேச்சிப்பாறை பகுதிகளில் அதிகபட்சமாக 2 செ.மீ மழையும் , உதகையில் 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும், சென்னையில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுclick here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...