???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ’மாஸ்டர்’ படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதில் உறுதி : தயாரிப்பு நிறுவனம் அறிக்கை 0 இந்திய கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி! 0 எதிர்பார்ப்பை எகிற வைக்கும் நோலனின் டெனெட்! 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல: தமிழக அரசு கடிதம்

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   23 , 2020  00:39:36 IST

புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தநிலையில் புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய்ந்து அதில் உள்ள சாதக, பாதகங்களை அறிந்து கொள்ள உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வி துறை சார்பில் தனித்தனியாக குழு அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
 
அதன்படி, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் ஒரு குழுவும், பள்ளிகல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் தலைமையில் மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டது.
 
இந்தநிலையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில், ‘மும்மொழி கொள்கை தமிழ்நாட்டுக்கு ஏற்புடையது அல்ல. பட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு தமிழ்நாட்டில் நடத்துவது சாத்தியம் அல்ல. கல்லூரிகள் பல்கலைக்கழகத்துடன் இணைப்பில் இருப்பது அவசியம் ஆகும். கல்லூரிகள் தாங்களாகவே பட்டங்களை வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது. மாநில அரசுக்கு கல்வியில் அதிக சுயாட்சி வழங்க வேண்டும்’ போன்ற கருத்துகள் இடம்பெற்றுள்ளன.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...