???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி உயர்வு 100ஐக் கடந்தது! 0 ஆந்திராவில் மேல்சபை கலைப்பு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் 0 உமர் அப்துல்லாவின் படம் வேதனையளிக்கிறது: மு.க.ஸ்டாலின் 0 கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான முகேஷின் மனு இன்று விசாரணை 0 கேரளாவில் CAA-க்கு எதிராக 620 கி.மீ மனிதச் சங்கிலி! 0 திருச்சி: பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை 0 துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: த.பெ.தி.க.வினர் கைது 0 ஏர் இந்தியா விற்பனை: சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு 0 'அடிக்க வேண்டும்': ஸ்டாலின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை! 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அமித்ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   11 , 2019  23:42:34 IST

தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோர், தமிழக பா.ஜ.க பொறுப்பாளரான பியுஷ் கோயலை டெல்லியில் சந்தித்தனர். அப்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ், இரண்டு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர்.

எனினும் பியுஷ் கோயல் உடனான சந்திப்பு அரசியல்ரீதியான சந்திப்பு என்றே கூறப்படுகிறது. குறிப்பாக அ.தி.மு.கவிற்குள் எழுந்துள்ள கலகக்குரல்களுக்கு முக்கிய காரணம் தேர்தல் தோல்விதான் என்ற கருத்து எழுந்துள்ள நிலையில், பா.ஜ.க உடன் கூட்டணி வைத்ததே தேர்தல் தோல்விக்கு காரணம் என அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் வெளிப்படையாகவே குற்றம்சாட்டினர்.

அமைச்சரவையில் அ.தி.மு.கவிற்கு இடம் இல்லாதது, ஒற்றைத் தலைமை கோரி்க்கை உள்ளிட்ட பல்வேறு அதிருப்தி குரல்களுக்கு மத்தியில் தங்கமணி, வேலுமணியின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...