???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கேரளாவில் பழங்குடி அடித்துக்கொலை: 2 பேர் கைது, 5 பேரிடம் விசாரணை 0 பொறியியல் கலந்தாய்வுக்கு இனி நேரில் வரவேண்டியதில்லை: அமைச்சர் தகவல்! 0 பல்கலைகளில் பல கோடி ரூபாய் ஊழல்: அன்புமணி குற்றச்சாட்டு! 0 சென்னை மீனவர்கள் மீது கடலோர காவல்படை தாக்குதல்! 0 கனடா பிரதமருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு! 0 டி.டி.வி.தினகரனுக்கு கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ ஆதரவு 0 ஜெயலலிதா பிறந்த நாள்: சென்னை வருகிறார் பிரதமர் மோடி 0 தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்! 0 ரஜினியை முதல்வராக முன்னிறுத்தி அரசியல் மாநாடு! 0 தலைமை செயலாளரை தாக்கிய வழக்கு: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் ஜாமின் மனு தள்ளுபடி 0 தயாரிப்பாளர்கள் - டிடிஎஸ் நிறுவனம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி 0 புதிய கட்சி தொடங்கியுள்ள கமலுக்கு பாரதிராஜா ஆதரவு 0 அதிமுக எங்கள் கட்சி: டி.டி.வி.தினகரன் பொளேர்! 0 ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ் 0 நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அரசு ஊழியர்களின் ஊதியம் 2.57 மடங்கு உயர்வு!

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   12 , 2017  00:25:17 IST

தமிழக அரசு ஊழியர்களின் ஊதியம் 2 புள்ளி 57 மடங்கு உயர்த்தப்படுவதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், குறைந்தபட்ச ஊதியம் 6 ஆயிரத்து 100 ரூபாயில் இருந்து 15 ஆயிரத்து 700 ரூபாயாகவும், அதிகபட்ச ஊதியம் 77 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
 
ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் 2 புள்ளி 57 மடங்கு ஓய்வூதியம் அதிகரிக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் குறைந்தபட்ச ஓய்வூதியம் 7 ஆயிரத்து 850 ரூபாயாகவும், அதிகபட்ச ஓய்வூதியம் 1 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாயாகவும் மற்றும் குடும்ப ஓய்வூதியம் 67 ஆயிரத்து 500 ரூபாயாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 
ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகபட்ச வரம்பு 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம பஞ்சாயத்து செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் 3 ஆயிரம் ரூபாயாகவும், அதிகபட்ச சம்பளம் 11 ஆயிரம் ரூபாயாகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
 
தமிழக அரசு தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள ஊழியர்களின் நலனை கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு 14 ஆயிரத்து 719 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும், இதனை அரசே ஏற்று கொள்ளும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...