அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்கள் நிலக்கரிக்கான ரூ.20,000 கோடி தரவில்லை: மத்திய அரசு

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   14 , 2021  11:27:36 IST

நாடு முழுவதும் நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டு மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழ்நாடு, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், நிலக்கரி கொள்முதலுக்கான நிலுவைத்தொகை 19,900 கோடி ரூபாயை செலுத்தவில்லை என மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. தமிழ்நாடு மட்டும், 1,087 கோடி ரூபாய் நிலுவைத்தொகையை செலுத்த வேண்டியுள்ளது.
 
போதுமான நிலக்கரி கையிருப்பை உறுதி செய்வது மற்றும் நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து, ஜனவரி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நினைவூட்டல் கடிதம் எழுதியதாகவும், ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
 
எனினும் பத்து மாநிலங்களுக்கும் கோல் இந்தியா நிறுவனத்தில் இருந்து, தொடர்ந்து நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
 
சொந்த சுரங்கங்களை கொண்டுள்ள ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்கள், கொரோனா மற்றும் மழையை காரணம் காட்டி நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகளை மேற்கொள்ளவில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
 
அடுத்த 5 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளதாகவும், 15 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இரண்டு வாரங்களில் வெட்டி எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.
 
நிலக்கரி உற்பத்தி குறைந்ததன் எதிரொலியாக, பஞ்சாபில் கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இங்கு திங்கள் கிழமை முதல் 7 மணி நேரம் வரை மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாபில் நாளென்றுக்கு 11,046 மெகா வாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில், கடந்த இரண்டு நாள்களாக 8,750 மெகாவாட் மின்சாரமே விநியோகிக்கப்படுகிறது.
 
இதனிடையே, நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது ஆதாரமற்றவை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியா மின்மிகை நாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...