???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு சிறை: தமிழக அரசு

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   14 , 2019  22:01:32 IST

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி சுபஸ்ரீ என்ற பெண் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. சாலையில் எத்தனையோ விபத்துகள் நடந்திருந்தாலும், சுபஸ்ரீயின் மரணம் அதிகாரிகளின் அலட்சியத்தை சுட்டிக்காட்டி விட்டது.

சுபஸ்ரீயின் மரணத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. பேனர் விவகாரத்தில் எத்தனையோ உத்தரவுகள் பிறப்பித்தும் அதிகாரிகள் அமல்படுத்துவதில்லை என்று ஆதங்கத்தையும் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும் சுபஸ்ரீயின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்ததுடன், இனி பேனர் வைக்கக்கூடாது என்று தங்கள் கட்சியினருக்கு உத்தரவையும் பிறப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பேனர்கள், கட்-அவுட்கள் வைப்பதற்கான தடை உத்தரவை கடுமையாக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் இந்த உத்தரவை முறையாக செயல்படுத்தும் வகையில் அதிகாரிகளுக்கு உரிய முறையில் அறிவுறுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அந்த சுற்றறிக்கையில், 'சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளாட்சி அமைப்புகளின் நெடுஞ்சாலைகள், இணைப்பு சாலைகள், தெருக்கள் மற்றும் நடைபாதைகளில் டிஜிட்டல் பேனர் நிறுவக்கூடாது.

நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசின் அறிவுரைகளை மீறி டிஜிட்டல் பேனர் நிறுவப்பட்டால், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்துடன் சம்பந்தப்பட்டோருக்கு ஓராண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்' என தெரிவித்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...